Hollywood Cinema news
பிபிசி வெளியிட்ட ஆவணப்படம்! – உடனே தடை செய்த இந்திய அரசு!
நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள் குறித்து பேசுவதே மீடியாவின் முக்கியமான நோக்கமாக உள்ளது. அதனால் சில சமயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவதும் வாடிக்கையான விஷயம்தான்.
இந்த நிலையில் பிரிட்டிஷ் ப்ராட்கேஷ்டிங் கார்பரேஷன் எனப்படும் பிபிசி நிறுவனமானது 2022 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. த மோடி கொஸ்டின் (the modi Question) எனப்படும் அந்த ஆவணப்படத்தின் முதல் எபிசோடை கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் ஒளிப்பரப்பியது பிபிசி.
ஆனால் அதில் இருந்த சில சர்ச்சையான காட்சிகள் இந்தியாவிலும் பரவ துவங்கியது. இதனை அடுத்து இந்திய அவசர சட்டத்தை பின்படுத்தி உடனடியாக இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை தடை செய்துள்ளது அரசு.
குஜராத் சம்பவம் ஆவணப்படம்:
இந்த ஆவணப்படம் மொத்தம் 59 நிமிடங்களை கொண்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பெரும் வன்முறை சம்பவம்தான் இந்த குஜராத் கலவரம். அப்போது வட மாநிலத்தில் பயணிகளை அழைத்து செல்லும் ரயில் ஒன்றிற்கு குஜராத்தில் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் இறந்தனர்.
இதனை முஸ்லீம்கள் செய்ததாக கூறி துவங்கிய கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இந்த சமயத்தில் குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தார். அப்போது அவர் என்ன செய்தார் என்பதை இந்த ஆவணப்படம் பேசுகிறது.
இந்தியாவில் மட்டுமே தடை செய்திருப்பதால் இந்த தொடர் இங்கிலாந்தில் தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் என கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்