Connect with us

நான் முன்ன மாதிரி இல்ல.. இப்ப திருந்திட்டேன்!.. விஜய் ஆண்டனி விஷயத்தில் எல்லை மீறிய யூ ட்யூப் சேனல்…

Tamil Cinema News

நான் முன்ன மாதிரி இல்ல.. இப்ப திருந்திட்டேன்!.. விஜய் ஆண்டனி விஷயத்தில் எல்லை மீறிய யூ ட்யூப் சேனல்…

Social Media Bar

சினிமா வட்டாரத்தில் துவங்கி ஊர் உலகில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதை கண்டெண்ட் ஆக்குவதற்கு சில யூ ட்யூப் சேனல்கள் தயாராக இருக்கின்றன.

ஏதாவது ஒரு சிறுவன் பேசும் வீடியோ ட்ரெண்ட் ஆகி விட்டால் அந்த சிறுவனை கூட சில யூ ட்யூப் நிறுவனங்கள் பேட்டி எடுப்பதை பார்க்க முடியும். அப்படியான யூ ட்யூப் சேனல்களில் முக்கியமானது சேனல் பிஹைண்ட் வுட்ஸ்.

நயன்தாராவிற்கு பூசை செய்த ஐய்யரில் துவங்கி ஊர் உலகில் ட்ரெண்ட் ஆகும் அனைவரிடமும் பேட்டி எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் மீரா இறந்தது குறித்தும் இது வீடியோ வெளியிட்டது.

ஆனால் அவற்றில் பல வீடியோக்கள் அவர்கள் குடும்பத்தை பாதிக்கும் வகையில் இருந்தது. இதனால் பிஹைண்ட்வுட்ஸ் தொடர்பாக பலரும் எதிர்மறை விமர்சனங்களை வைக்க துவங்கினர்.

எனவே இனி யாருடைய இறப்பு தொடர்பாகவும் வீடியோ தயார் செய்யமாட்டோம் என ஒரு நோட்டீஸை வெளியிட்டுள்ளது பிஹைண்ட்வுட்ஸ் யூ ட்யூப் சேனல்.

To Top