Connect with us

சொந்த தாயே அனுப்பிய லீகல் நோட்டீஸ்.. மனம் உடைந்து போன பிக்பாஸ் தனலெட்சுமி!.

News

சொந்த தாயே அனுப்பிய லீகல் நோட்டீஸ்.. மனம் உடைந்து போன பிக்பாஸ் தனலெட்சுமி!.

Social Media Bar

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் தனலெட்சுமி முக்கியமானவர். பிக்பாஸில் அவர் வந்த புதிசில் அவரை பலரும் வெறுத்தனர். ஆனால் மற்ற போட்டியாளர்கள் செய்த வேலைகளோடு கம்பேர் செய்யும்போது தனலெட்சுமி எவ்வளவோ தேவலை என்கிற நிலை இருந்தது.

பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளி வருபவர்களுக்கு சினிமாவிலோ அல்லது விஜய் டிவியிலோ கூட தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தனலெட்சுமியை பொறுத்தவரை அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

பிக்பாஸ் பிரபலம்:

அவரோடு சக போட்டியாளராக இருந்த ஜனனியாவது லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் தனலெட்சுமியை பொறுத்தவரை அவருக்கு அதுகூட கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் தனலெட்சுமி. இந்த நிலையில் பிக்பாஸ் தனலெட்சுமிக்கும் அவருடைய அம்மாவிற்கும் இடையே ஏதோ பிரச்சனை என கூறப்படுகிறது. இதனை அடுத்து தன்னுடைய பெயரை தனலெட்சுமி எங்கும் பயன்படுத்தக்கூடாது என கூறி அவரது தாய் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மனம் உடைந்த தனம்:

மேலும் தனலெட்சுமிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த தனலெட்சுமி அதை ஒரு பதிவாக பகிர்ந்துள்ளார். அப்படி என்ன இருவருக்கும் இடையே பிரச்சனை என்பதை குறித்து எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.

To Top