Connect with us

எஸ்.கேவுக்கு டஃப் கொடுத்துச்சா… பிளடி பெக்கர் முதல் நாள் வசூல் நிலவரம்!..

bloody beggar

Tamil Cinema News

எஸ்.கேவுக்கு டஃப் கொடுத்துச்சா… பிளடி பெக்கர் முதல் நாள் வசூல் நிலவரம்!..

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறும் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கவின்.

ஏற்கனவே கவின் நடித்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. முக்கியமாக குடும்பக் கதையை கொண்டிருந்ததால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்தார் கவின்.

இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் கவின் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பிளடி பெக்கர்.

பிளடி பெக்கர் கலெக்‌ஷன்:

இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியிருக்கிறார். இயக்குனர் நெல்சன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, பிரித்விராஜ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

bloody beggar

bloody beggar

நேற்று வெளியான பிளடி பெக்கர் திரைப்படம் அமரன் திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாகிறது. எனவே இந்த திரைப்படம் எந்த அளவிற்கு வசூல் கொடுக்கும் என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரு நாளில் 2.25 கோடியில் வசூல் செய்திருக்கிறது பிளடி பெக்கர் திரைப்படம். தொடர்ந்து இந்த வார இறுதிக்குள் 5 அல்லது 6 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

To Top