இவ்வளவையும் பண்ணிட்டுதான் சங்கி இல்லைனு சொல்றீங்களா!.. ரஜினிகாந்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்!..

Rajinikanth Lal salaam : ரஜினிகாந்தின் லால் சலாம் தொடர்பான செய்திகள்தான் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்களை பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

அந்த விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகி சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக விஜய் குறித்த காக்கா கழுகு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் எனது தந்தையை பொதுமக்கள் சங்கி என்று கேலி செய்வதை பார்த்து உள்ளேன்.

ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் இந்த லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க முடியாது. எனவே எனது தந்தை சங்கி கிடையாது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேள்வி கேட்கும் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கூறும் பொழுது

“* Demonetization வந்தபோது Hats off Modi ji. New India is born எனக்கூவினேன்.

* மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், மற்றும் அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன்.

Social Media Bar

* பத்மவிபூஷன், தாதா சாஹேப் பால்கே விருதுகளை இந்த ஆட்சியில்தான் வாங்கினேன்.

* கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டபோது.. கொடியில் தாமரை சின்னத்தை வைத்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியதும் தாமரையை நீக்கினேன்.

* தலித் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவைப்பெற காலா, கபாலி, லால் சலாம் படங்களில் நடித்தேன்.

* பாஜக/இந்துத்வா ஆதவாளர்களான துக்ளக் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி ஆகியோரை ஆலோசித்து அரசியல் கட்சி முடிவுகளை எடுத்தேன்.

* துக்ளக் படிப்போருக்கு மூளை ஜாஸ்தி என்றேன்.

* உலக அரசியல் இல்லாத ‘ஆன்மீக அரசியல்’ எனும் தத்துவத்தை கண்டுபிடித்தேன்.

 * மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்களில் பலத்த மௌனம் காத்தேன்.

* மாமிசம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்றேன்.

* போராட்டம் செய்த மக்களை ஷமூக விரோதி என்றேன்.

* காலம் காலமாக திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற சித்தர்கள் இருந்தும்… குடுகுடுவென உ.பி.க்கு ஓடிப்போய் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தேன்.

* ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக ஓடிப்போய் முதல் வரிசையில் அமர்ந்து மோடிக்கு கும்பிடு போட்டேன்.

* இப்படி இன்னும் பல சாகசங்கள் செய்து வருகிறேன். இனியும் செய்வேன்.

ஆகவே… நான் சங்கி இல்லை.

லால் சலாம் படத்தை வெற்றியடைய செய்யுங்கள். என்று தனது டிவிட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார் Blue sattai Maaran.