Connect with us

மன்சூர் அலிக்கானுக்கு எதிரா பேசுறீங்களே நீங்க பெரிய ஒழுங்கா!.. நெட்டிசன்களிடம் சிக்கிய சிரஞ்சீவி!.

chiranjeevi

Tamil Cinema News

மன்சூர் அலிக்கானுக்கு எதிரா பேசுறீங்களே நீங்க பெரிய ஒழுங்கா!.. நெட்டிசன்களிடம் சிக்கிய சிரஞ்சீவி!.

Social Media Bar

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டவர் சிரஞ்சீவி. தமிழில் எப்படி ரஜினிகாந்த் அப்போது பெரும் நடிகராக இருந்தாரோ அதே காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி.

இவர் தற்சமயம் நடந்துள்ள திரிஷா விஷயம் தொடர்பாக குரல் கொடுத்துள்ளார். அதாவது திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் பேசும் பொழுது முன்பெல்லாம் இருப்பது போல கதாநாயகிகளுடன் காட்சிகள் தற்சமயம் வில்லன் நடிகர்களுக்கு காட்சிகள் இருப்பதில்லை.

முக்கியமாக பெரும் நடிகைகளுடன் அப்போதெல்லாம் வில்லன் நடிகர்களுக்கு கற்பழிப்பு காட்சிகள் எல்லாம் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் நடிகைகளை கண்ணிலேயே காட்ட மாட்டார்கள் லியோ படத்தில் கூட திரிஷாவை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து படப்பிடிப்பை முடித்து அப்படியே அழைத்துச் சென்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக கோபமடைந்து திரிஷா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி இருந்தார். இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி இதில் த்ரிஷாவிற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார் அதில் அவர் கூறும் பொழுது நான் திரிஷாவின் பக்கம் தான் இருப்பேன். மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசி இருக்கும் விஷயங்கள் கண்டனத்திற்கு உரியவை என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் நெட்டிசன்கள் பொதுவெளியில் சிரஞ்சீவி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். மேலும் இவர் தமன்னாவின் உடல் குறித்து அவர் முன்பே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதே போல ஒரு பட விழாவில் நடிகை பூஜா ஹெக்தேவிடமும் அத்துமீறி நடந்துக்கொண்டார் என கூறி அந்த வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு வருகின்றனர்.

To Top