Cinema History
அஜித் ஹெலிகாப்டர்தான் ஓட்டுவார்.. ஆனால் அவரு ஃபைட்டர் ஜெட்டே ஓட்டுவார்!. டெல்லி கணேஷின் அறியாத பக்கங்கள்!..
தமிழ் சினிமா நடிகர்களை பொருத்தவரை அனைத்து நடிகர்களின் பின்னணியும் பொது மக்களுக்கு தெரியாது. சிலரின் சினிமாவிற்கு முந்தைய வாழ்க்கையை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பான விஷயங்கள் நடந்திருப்பதை பார்க்க முடியும்.
அப்படிப்பட்ட வியப்பான கதையை கொண்ட ஒரு நடிகர்தான் டெல்லி கணேஷ். தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரமாகவும் முக்கியமான துணை கதாபாத்திரமாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். இப்போது வரை தமிழ் சினிமாவில் சில படங்களில் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஆரம்பத்தில் டெல்லி கணேஷிற்கு நடிப்பின் மீது எந்த ஒரு விருப்பமும் கிடையாது. அவர் படித்து முடித்தவுடன் இந்திய விமானப்படையில் போய் சேர்ந்தார். அங்கு அடிபட்ட ராணுவ வீரர்களுக்காக ஒரு சமயம் ஒரு நாடகம் நடத்தப்பட இருந்தது அந்த நாடகத்தில் டெல்லி கணேஷ் நடித்தார். அப்பொழுது அவரது நடிப்புக்கு அங்கே வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு ராணுவத்தில் கொடுக்கும் விடுமுறையின் காரணமாக திரும்ப சென்னைக்கு வந்தார் டெல்லி கணேஷ். அப்போது சென்னையில் இருந்த ஒரு நாடகக் குழு அவரது நடிப்பை பற்றி கேள்விப்பட்டு அவர்களது நாடக கம்பெனியில் டெல்லி கணேசுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தனர். அது சென்னையிலும் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதன் பிறகுதான் டெல்லி கணேஷ் சினிமாவில் நடிக்க துவங்கினார் அதற்கு முன்பு வரை இந்திய ராணுவத்தில் விமானப்படையில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர் தான் டெல்லி கணேஷ்.
