Maniratnam: சமீபத்தில் வெளிவந்த பைசன் திரைப்படத்தின் மூலமாக இப்போது அதிக பிரபலம் அடைந்திருக்கிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.
இவர் நன்றாக நடிக்க கூடியவர் என்றாலும் கூட துருவ் விக்ரம் தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரிதாக அவருக்கு வெற்றியை பெற்று தராமல் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை அவருக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் பைசன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து எந்த திரைப்படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி பலருக்குமே இருந்து வந்தது.
இந்த நிலையில் டாடா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் தான் அடுத்துதுருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன.
ஆனால் இப்பொழுது அடுத்து இவர் திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்து இருக்கின்றன. மணிரத்தினத்தை பொருத்தவரை அவரது படத்தில் நடிக்கும் நிறைய நடிகர்கள் அதற்குப் பிறகு சினிமாவில் பெரிய இடத்தை பிடித்திருக்கின்றனர்.
அப்படி ஒரு இடத்தை பிடிக்க துருவ் விக்ரமிற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் காந்தாரா சாப்டர் 1, மதராஸி மாதிரியான திரைப்படங்களில் நடித்த நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.










