Connect with us

அமீர் படத்துல நான் பாட மாட்டேன்!.. விடாபிடியாக இருந்த பாடகியை ஏமாற்றிய அமீர்!..

sherya ghosal ameer

News

அமீர் படத்துல நான் பாட மாட்டேன்!.. விடாபிடியாக இருந்த பாடகியை ஏமாற்றிய அமீர்!..

Social Media Bar

Director Ameer: தமிழ் சினிமாவில் மதுரையில் இருந்து ஒரு குழுவாக கிளம்பி வந்து இயக்குனர் ஆன நால்வர்களில் அமீரும் ஒருவர், பாலா,சமுத்திரக்கனி,சசிக்குமார் ஆகியோர்தான் மீதி மூவர். கடந்த சில தினங்களாக அமீர் தொடர்பான சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பெரும் புயலாக வீசி வந்தது.

பருத்திவீரன் திரைப்படத்தின்போது ஞானவேல்ராஜா அமீருக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதை ஒட்டியே இந்த பிரச்சனை சென்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து பலரும் அமீருக்கு ஆதரவாக பேச தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார் ஞானவேல்ராஜா.

ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. பாலாவுடன் பணிப்புரிந்த காரணத்தினால் அமீரும் கூட கொஞ்சம் டெரரான ஆள் என்றுதான் கூற வேண்டும். தன்னுடன் பணிப்புரிபவர்களிடம் சற்று டெரராக நடந்துக்கொள்பவர் அமீர்.

ameer
ameer

இதனால் நடிகை ப்ரியாமணிக்கும் இவருக்குமே சண்டையாகியுள்ளது. இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தில் அய்யய்யோ என்கிற பாடலை பாடுவதற்காக ஹிந்தியின் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலை அழைத்திருந்தார் அமீர். ஸ்ரேயா கோஷல் பாடும்போது அவர் பாடுவது சரியில்லை என அவரை பாடாய் படுத்தி இருக்கிறார் அமீர்.

இந்த நிலையில் பாடல் முடிந்து ஸ்ரேயா கோஷல் கிளம்பும்போது இனி இவர் படத்திற்கு பாடுவதற்கு என்னை அழைக்காதீர்கள் என கூறியுள்ளார். ஆனால் ஆதி பகவான் திரைப்படத்தை இயக்கியப்போது மீண்டும் பாடல் பாட அமீர் ஸ்ரேயா கோஷலை அழைத்துள்ளார்.

அப்போது ஸ்ரேயா கோஷல் அமீரை மறந்துவிட்டார். எனவே அந்த பாடலுக்கு ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். அப்படி பாடி கொண்டிருக்கும்போது அமீர் அமைதியாக இல்லாமல் அதில் ஒரு குறையை கூறியுள்ளார். அமீர் குரலை கேட்டதும் ஸ்ரேயா கோஷல் அதிர்ச்சியாக அவரை திரும்பி பார்த்துள்ளார்.

அதை பார்த்த யுவன் சங்கர் ராஜா, அமீர் உங்களை கண்டுப்பிடிச்சிட்டாங்க போல என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இருந்தாலும் ஸ்ரேயா கோஷல் அந்த பாடலை பாடி கொடுத்துள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top