Tamil Cinema News
மூஞ்சுல அடிச்ச மாதிரி இருந்துச்சு.. பிச்சைக்காரன் கற்றுக்கொடுத்த பாடம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் அமீர்..!
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் சமூக அக்கறை கொண்ட ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அமீர் அதற்கு பிறகு தனியாக திரைப்படம் இயக்கத் தொடங்கினார்.
எப்போதுமே சமூகத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை நடக்கும்பொழுது அது குறித்து குரல் கொடுத்து வந்துள்ளார். அப்படியாக சமீபத்தில் அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சமீபத்தில் நான் காரில் வெளியில் சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது வயது முதிர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் என்னுடைய கண்ணாடி கதவை தட்டினார். அவரை பார்க்கும் பொழுதே அவர் மிகவும் வறுமையில் இருக்கிறார் என தெரிந்தது. எனவே அவரிடம் ஒரு 50 அல்லது 100 ரூபாய் கொடுக்கலாமென்று என்னுடைய காரில் தேடினேன்.
அமீர் கூறிய விஷயம்:
ஆனால் என்னிடம் சில்லறையே இல்லை 500 ரூபாய் நோட்டுகள் தான் இருந்தது. உடனே அந்த பிச்சைக்காரன் என்னை பார்த்து காசு இல்லைனா விடுங்க தம்பி என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அப்பொழுதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. இவ்வளவு ரூபாய் காசு இருந்தும் அவருக்கு ஒரு 500 ரூபாய் கொடுக்க மனம் இல்லையே நான் பிச்சைக்காரனா? அல்லது அவர் பிச்சைக்காரரா என்கிற கேள்வி எழுந்தது.
ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிடுகிறோம் என்றால் டிப்ஸ் ஆக ஒரு பெரிய தொகையை கொடுக்கிறோம். அப்படி என்றால் இந்த சமூகத்தில் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் ஒரு நிர்ணயத்தை வைத்திருக்கிறோம்.
பிச்சைக்காரன் என்றால் அவனுக்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் அதுவே வெயிட்டர் என்றால் நமது அந்தஸ்தை காட்ட வேண்டும் என்பதால் நிறைய கொடுக்க வேண்டும் ஏன் ஒரு பிச்சைக்காரனுக்கு 500 ரூபாய் கொடுப்பதில் என்ன கெட்டு விடப் போகிறது என்று கேள்வியை எழுப்பி இருந்தார் அமீர்.
