ரஜினி படம் மாதிரி இருந்துருமோனு பயந்துட்டேன்!.. ஓப்பனாக ரஜினியை கலாய்த்த லிங்குசாமி!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் சில ஹிட் படங்களை கொடுத்து கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கிய திரைப்படங்களில் ரன், சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றவை.

தயாரிப்பாளராகவும் இவர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் லிங்குசாமி பாபா திரைப்படத்தை விமர்சித்து பேசிய காணொளி ஒன்று பிரபலமாகி வருகிறது. அதில் லிங்குசாமி பேசும்போது “நான் பாகுபலி திரைப்படத்திற்கு வெகு ஆவலாக கிளம்பி கொண்டிருந்தேன்.

பெரும்பாலும் அதிகமாக எதிர்பார்த்து ஒரு திரைப்படத்திற்கு கிளம்பும்போது யாராவது போன் செய்தால் கூட அதை எடுக்க மாட்டேன். இந்த நிலையில் ஒரு நபர் மட்டும் காலையில் இருந்து பலமுறை போன் செய்திருந்தார்.

lingusamy-1
lingusamy-1
Social Media Bar

சரி ஏதாவது அவசரமான விஷயமாக இருக்கும் என அவரது போனை எடுத்தேன். அப்போது பேசிய அவர் பாகுபலி பார்த்துட்டீங்களா என கேட்டார். நான் இப்போதுதான் போய்க்கிட்டு இருக்கேன் என நான் கூறினேன். பாபா படம் பார்த்திருக்கிறீர்கள் என்றால் பாகுபலி பார்க்க தேவையில்லை என்றார் அவர்.

இதனால் நான் பாகுபலியை பார்க்கும்போது பாபா போல இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே பார்த்தேன். ஆனால் போக போக அது படம் வேற மாதிரி இருந்தது என்கிறார் லிங்குசாமி. அந்த அளவிற்கு திரைத்துறையினரே பயப்படும் படமாக ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் இருந்துள்ளது.