News
அந்த விஜய் படம் நான் இயக்கியிருக்க வேண்டிய படம்… இயக்குனர் பார்த்திபன் கை நழுவி போன படம்!.
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் பார்த்திபன் முக்கியமானவர். பெரும்பாலும் பார்த்திபன் இயக்கும் திரைப்படங்கள் உலக சினிமாக்களின் சாயலை கொண்டிருக்கும்.
ஆரம்பத்தில் பார்த்திபன் தமிழ் சினிமாவில் சாதாரண திரைப்படங்களைதான் இயக்கி வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல உலக சினிமா தரத்தில் தமிழில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.
பார்த்திபன் கதை தேர்ந்தெடுப்பு:
அதனை தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படம் ஆக்கினார் பார்த்திபன். ஆனாலும் அந்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன்.

இப்படி வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து அவர் செய்து வருகிறார் இருந்தாலும் அவருக்கு இதுவரை பெரிய ஹீரோக்கள் யாரும் திரைப்படங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்ததில்லை என்று மனம் நொந்து கூறுகிறார் பார்த்திபன்.
இப்படி ஒரு பேட்டியில் பேசும்பொழுது விஜய்யின் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்து இறுதியில் இயக்க முடியாமல் போன சம்பவத்தையும் பகிர்ந்து இருக்கிறார் பார்த்திபன்.
விஜய்யுடன் வாய்ப்பு:
அதில் அவர் கூறும் பொழுது நண்பன் திரைப்படத்தின் மூலக்கதையான 3 இடியட்ஸ் திரைப்படத்தை பார்த்த விஜய் அதை என்னிடம் தான் திரைப்படமாக்க வேண்டும் என்று கேட்டார்.

அதில் அவர் நடிக்கவும் தயாராக இருந்தார். நானும் சரி விஜய்யை வைத்து அவர் திரைப்படத்தை இயக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்கு பிறகு அந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்தன.
ஏனெனில் ஷங்கரும் விஜய்யும் ஒன்றிணையும் பொழுது அவர்களுக்கு நல்ல ஒரு மார்க்கெட் கிடைக்கும் படத்திற்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தனர். இந்த நிலையில் அந்த படத்தின் வாய்ப்பு என்னை விட்டு சென்றது என்று கூறியிருக்கிறார் பார்த்திபன். ஒருவேளை பார்த்திபனே இயக்கியிருந்தால் நண்பன் படத்தின் காமெடி தரம் என்பது இன்னும் அதிகரித்திருக்கும் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.
