Tamil Cinema News
500 கோடி 1000 கோடின்னு கதை விடுறாங்க..! பெரிய நடிகர்களை வச்சி செய்த சுந்தர் சி..!
முன்பெல்லாம் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி என்பது படத்தின் வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படவில்லை. அதையும் தாண்டி படத்தின் கதையம்சம் போன்றவை எல்லாம் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களும் கூட கவனம் பெற்று வந்தது.
ஆனால் இப்போதைய காலக்கட்டங்களில் படத்தின் கலெக்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே பெரிய தொகையை கலெக்ஷனாக காட்டுகிறார்கள்.
விஜய், அஜித் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களில் இப்படி நடப்பதை பார்க்க முடியும். இது உண்மையா பொய்யா என்கிற ஐயம் இன்னமுமே பலருக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுக்குறித்து மிக வெளிப்படையாக பேசியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.
இயக்குனர் சுந்தர் சி இதுக்குறித்து பேசும்போது இந்த படத்தின் கலெக்ஷன் என கூறுவதெல்லாம் வெறும் நம்பர் ரேஸ்தான். சும்மா விளம்பரத்துக்காக சொல்கிறார்கள். தயாரிப்பாளர்கள் எல்லாம் எப்படி நொந்து நூடுல்ஸ் ஆகிறாங்கன்னு எங்களுக்குதான் தெரியும்.
அப்படி வசூல் போட்டாதான் அந்த நடிகருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும். அதனால் அப்படி பண்றாங்க. நம்மை பொறுத்தவரை மக்களுக்கு நம்ம படம் பிடிச்சிட்டா அதுவே போதும் என கூறியுள்ளார் சுந்தர் சி
சுந்தர் சி நிறைய திரைப்படங்களை தயாரித்துள்ளார். எனவே ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் இந்த வசூல் குறித்து நடக்கும் மோசடிகளை அவர் வெளிக்கொண்டு வந்துள்ளார் என இதுக்குறித்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
