Cinema History
முதன் முதலா என்ன பாட்டு பாட வச்சவங்க அவங்கதான்… சீக்ரெட்டை உடைத்த எஸ்.பி.பி
தமிழ் சினிமாவில் உள்ள பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். தமிழ் சினிமாவிலேயே தனி வகையான குரல் வளத்தை கொண்டு அதை வைத்து ரசிகர்களை கட்டி போட்டவர் எஸ்.பி.பி என கூறலாம்.
எஸ்.பி.பி அதிகமாக ரஜினிக்கு பாடல்கள் பாடியுள்ளார். ரஜினிகாந்திற்கும் எஸ்.பி.பிக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. தன்னுடைய படத்தில் முதல் பாடலை எஸ்.பி.பி பாடினால் அந்த படம் ஹிட் அடித்துவிடும் என்று செண்டிமெண்டாக நம்பினார் ரஜினி.

போன வருடம் வெளிவந்த அண்ணாத்தே திரைப்படம் வரையில் ரஜினியின் பல படங்களில் எஸ்.பி.பிதான் முதல் பாட்டை பாடியுள்ளார்.
இடையில் ஒரு பேட்டியில் எஸ்.பி.பி கூறும்போது ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆசையே இல்லாமல் இருந்தது. ஒருமுறை எனது பாடலை கேட்ட பாடகி ஜானகிதான் உனக்கு சிறப்பான குரல் உள்ளது. இதை கொண்டு சினிமாவில் சென்று பாடினால் உனக்கு நல்ல எதிர்க்காலம் கிடைக்கும் என கூறினார்.
நானும் அவர் பேச்சை கேட்டு சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தேன். அதே போல மக்களும் எனது குரலை ஏற்றுக்கொண்டனர் என கூறியுள்ளார் எஸ்.பி.பி.
