Connect with us

தீபாவளி வரைக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு கிடையாது!.. ரஜினியால் தடைப்பட்டு போன விடாமுயற்சி படப்பிடிப்பு!.

rajinikanth vidamuyarchi

News

தீபாவளி வரைக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு கிடையாது!.. ரஜினியால் தடைப்பட்டு போன விடாமுயற்சி படப்பிடிப்பு!.

Social Media Bar

Vidamuyarchi : தமிழ்சினிமாவில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். அதனால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு அவரால் எளிமையாக தயாரிப்பு செலவுகளை செய்ய முடிகிறது.

சினிமாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒரு பெரும் படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அது நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல படத்திற்கான கால்ஷீட் தாண்டி அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் அது தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் இந்த இரண்டு பிரச்சனைகளையும் சந்தித்து வரும் நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருக்கிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான லால் சலாம் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அந்த படத்திற்கு தயாரிப்பு செலவு செய்த தொகையை கூட திரைப்படம் வசூல் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

சிக்கலில் லைகா நிறுவனம்

இதிலேயே லைக்கா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தை படமாக்குகிறேன் என்று வெகு நாட்களாக அந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஆனால் இன்னமும் படப்பிடிப்பை முடித்த பாடில்லை.

Vettaiyan
Vettaiyan

அதே போல கிட்டத்தட்ட 8 மாதங்களாக வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தீபாவளிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெருந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது லைகா நிறுவனம்.

இதனையடுத்து வேட்டையன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என நம்பியுள்ளது லைகா. எனவே முதலில் தீபாவளிக்கு வேட்டையன் திரைப்படத்தை வெளியிடுவோம். பிறகு அந்த லாபத்தை வைத்து விடாமுயற்சி படப்பிடிப்பை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளனர்.

To Top