Tamil Cinema News
கே.ஜி.எஃப்க்கு இணையான கதைகளம்.. மோகன்லால் எம்புரான் படத்தின் கதை இதுதான்.!
நடிகர் மோகன்லால் நடித்து பிரித்திவிராஜ் இயக்கத்தில் ஏற்கனவே மலையாளத்தில் வெளியான திரைப்படம் லூசிபர். இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தை கொண்டு வெளியாகி உள்ளது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆனது பெரும் வரவேற்பை பெற்று. அதிக வசூலை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த திரைப்படம் தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. தற்சமயம் அந்த படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது.
லூசிபர் படத்தின் முதல் பாகம் முடியும்போது அதுவரை மோகன்லால் ஒரு சாதாரண ஆள் என்று பலரும் நினைத்து வருவார்கள். ஆனால் படத்தின் இறுதியில்தான் உலக அளவில் பிரபலமான ஒரு கூலிப்படை இயக்கத்திற்கும் மோகன்லாலுக்கும் தொடர்பு இருப்பதாக கதை முடியும்.
இந்த நிலையில் அதனை இன்னும் பெரிதுபடுத்தி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு இருக்கிறது. கே.ஜி.எப் படத்திற்கு இணையான ஒரு மாஸ் திரைப்படமாக எம்பிரான் திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கும் பட்சத்தில் கேரள சினிமாவில் அதிக வசூலை கொடுத்த முதல் திரைப்படமாக இது இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
