மீசை ராஜேந்திரன் மீசைய எடுக்க தயாரா?.. மறக்காமல் கேட்ட தளபதி ரசிகர்கள்!..

தற்சமயம் திரையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது லியோ திரைப்படம்.

இதற்கு முன்பு இருந்த விஜய் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமக லியோ இருக்கும் என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பேட்டிகள் கூறியிருந்தார். அதேபோலவே இந்த படத்தில் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன்பு ஏற்கனவே விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார் என்று ஒரு பேச்சு இருந்தது அதற்கு தகுந்தார் போல வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார்.

இதனால் ரஜினியே தனது திரைப்படமான ஜெயிலரில் பெயரை தூக்க நாலு பேரு என்று குறிப்பிட்டு பாடலை எழுதியிருந்தார். இது குறித்து மீசை ராஜேந்திரன் கூறும் பொழுது ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோவால் முறியடிக்க முடியாது அப்படி ஒரு வேலை முறியடித்து விட்டால் என் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று முதல் நாளே நல்ல வசூலை கொடுத்துள்ளது லியோ திரைப்படம். இதனை அடுத்து நல்ல ஹிட் கொடுத்ததே லியோ திரைப்படம் இப்பொழுது மீசை எடுக்க தயாரா மீசை ராஜேந்திரன் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கியுள்ளனர்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.