Connect with us

விஜய் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறும் கோபிநாத்? நீயா நானா-வின் நிலை என்ன? 

gopi nath

News

விஜய் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறும் கோபிநாத்? நீயா நானா-வின் நிலை என்ன? 

Social Media Bar

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி விஜய் டிவி. இதில்,  பல தொலைக்காட்சிகளை போல படம், சீரியல்கள் என்று இல்லாமல் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த ஷோக்களை மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள். 

அப்படி பல வருடங்களாக மெகா ஹிட்டாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் ஒரு காரணமாக சொல்லலாம். மக்களுக்கு ஆர்வம் குறையாத வகையில் நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் இவர் பிரபலம்.

 இவர்  தற்போது தொலைக்காட்சியுடன், வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழிநடைக்காகவும், தனித்துவதிர்காகவும், யதார்த்தமாகவும் பேசுவதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார். 

நீயா நானா தவிர, விஜய் டிவி விருதுகள், குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?, உன்னால் முடியும் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார். தெருவெல்லாம் தேவதைகள், நேர் நேர் தேமா, நீயும் நானும் போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். 

கோபிநாத்
கோபிநாத்

இருந்தும் இவர் விஜய் டிவி நீயா நானா பிரபலமாகவே கருதப் படுகிறார். பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத் இப்போது வேறொரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.Star Sports தமிழில் 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாக போகும் IPL போட்டியில் புதிய தொகுப்பாளராக கோபிநாத் இணைந்துள்ளார். 

இருந்தும் நீயா நானாவில் இவரே தொடர்ந்து தொகுத்து வழங்குவார் என்பது குறிப்பிட தக்கது. 

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். 

To Top