Tamil Cinema News
இயக்குனர் சங்கர் வைத்த அந்த காட்சி.. மேடையிலேயே வைத்து செஞ்ச நீயா நானா கோபிநாத்.!
வெகு வருடங்களாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் பல விஷயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன அவற்றிற்கு கோபிநாத் கொடுக்கும் பதில்களும் மிகச் சிறப்பாக இருக்கும்.
அதனாலேயே அந்த நிகழ்ச்சி இன்னும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பழைய நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஷங்கர் அவரது திரைப்படத்தில் வைத்த காட்சி ஒன்று விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
நீயா நானா கோபிநாத்:
அந்த நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் கூறும் பொழுது ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் அதிக சத்தத்துடன் பாட்டு வைக்கிறார்கள். அது மிகுந்த தொல்லையாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதனை கேட்ட கோபிநாத் அவரிடம் ஒரு விஷயத்தை கூறினார்.
அதாவது நீங்கள் பணக்காரர் என்பதால் உங்களுக்கு அந்த விஷயம் தொல்லையாக இருக்கிறதே தவிர உண்மையில் அது தொல்லை கிடையாது நீங்கள் பார் மாதிரியான இடங்களுக்கு சென்று நடனம் ஆடும் பொழுது அங்கு ராக் மியூசிக்களை அதிக சத்தத்தில் தான் கேட்பீர்கள்.
அப்பொழுது அது உங்களுக்கு தொல்லையாக இருக்காது. ஏன் உங்களுக்கு அம்மன் கோவிலில் போடும் பாடல் தொல்லையாக இருக்கிறது என்றால் அது ஏழைகளுக்கான விஷயம், உங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது அதனால் அதை நீங்கள் ஒரு தொல்லையாக பார்க்கிறீர்கள்.
அவர் கொடுத்த விமர்சனம்:
நமது கலாச்சார ரீதியாக அம்மன் எல்லா இடங்களிலும் வணங்கப்படும் ஒரு தெய்வமாக இருக்கிறது. எனவே அதற்கான திருவிழா என்பது நம் வாழ்க்கையோடு ஒத்த ஒரு விஷயம். ஆனால் பணக்காரர்களுக்கு அது அவர்கள் வாழ்க்கையில் இல்லை என்பதால் அதை நீங்கள் விட்டு விலகி வந்து விட்டீர்கள்.
மேலும் அதை தொல்லையாக நினைக்கிறீர்கள் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் கோபிநாத் எந்திரன் திரைப்படத்தில் இதே மாதிரியான காட்சி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் ரவுடிகள் மற்றும் சேரியை சேர்ந்தவர்கள் அதிக சத்தத்தை வைத்து பாடல்கள் கேட்பதாகவும் அது பணக்காரர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதனை விமர்சிக்கும் வகையிலேயே இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பேசப்பட்டிருந்தது.
