20ஆண்டுகளுக்கு மேலாக நடிக்காததற்கு காரணம் இதுதான், நடிகர் மைக் மோகனுக்கு நடந்த சம்பவம்!…
Mic Mohan : நடிகர் மோகன் 70 மற்றும் 80களில் பெண் ரசிகைகளை மிகவும் கவர்ந்தவர். அவர் நடித்த படங்கள், பாடல்கள் என்று எது எடுத்தாலும் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறவே முடியாது.
அன்றைய கால கட்டத்தில் காதல் படங்கள் என்றால் மோகனின் படங்கள் மட்டும் தான் கூறுவார்கள் அந்த அளவிற்கு மோகனின் நடிப்பும் படத்தின் தரமும் இருக்கும். இன்றும் சில வீடுகளில் மோகனின் படம் என்றாலோ அல்லது பாடல் என்றாலோ விரும்பிப்பார்க்காத 80ஸ் கிட்ஸ் இருக்கவே முடியாது.

ஒரு காலத்தில் முடிசூடா காதல் மன்னன் என்று புகழ் பெற்றவர் மோகன். அவர் நடித்தது மொத்தம் 100க்கும் அதிகமான படம் முக்கால்வாசி திரையரங்கில் வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள் தான்.
அதனாலேயே மோகனை வெள்ளிவிழா நாயகன் என்று தமிழ் திரையுலகமே பாராட்டியுள்ளது. மேலும் மைக் மோகன் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
ஆனால் இவர் 1991 க்குப்பிறகு சரிவர நடிக்கவில்லை. இவர் மற்ற மொழிப்படங்களில் நடித்ததை விட தமிழ் மொழியில் தான் புகழ் பெற்ற நடிகராக உருவானார்.
1991க்குபிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்தாதற்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு கதையும், இயக்குனர்களும் சரியாக அமையவில்லை அதனாலேயே நான் படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன் அதாவது ஒரு நல்ல படம் தேர்ந்தெடுக்க இவ்வளவு ஆண்டுகளா ஆகும்? தற்போது ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

1991 க்கு பிறகு இன்று வரை ஓரிரண்டு படம் மட்டுமே நடித்திருக்கிறார். அதுவும் சரியாக ஓடவில்லை. கதையை தேர்ந்தெடுக்கவே இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதாக கூறியிருக்கிறார் மோகன்.