Connect with us

ஏ.ஆர் ரகுமானுக்கு பாட்டு பாடுனதால வாய்ப்பை இழந்தேன்!.. இளையாராஜா குறித்து ஓப்பன் டாக் கொடுத்த பாடகி!.

singer minmini ilayaraja

Cinema History

ஏ.ஆர் ரகுமானுக்கு பாட்டு பாடுனதால வாய்ப்பை இழந்தேன்!.. இளையாராஜா குறித்து ஓப்பன் டாக் கொடுத்த பாடகி!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் இளையராஜா எப்படிப்பட்ட உயரத்தை கொண்டிருந்தார் என்பது பலரும் அறிந்த விஷயமே. அவரது இசைக்காகவே தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் ஓடின காலங்கள் உண்டு. இந்த நிலையில் இளையராஜாவிடம் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட தனி வகையான இசையுடன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.

ஏ.ஆர் ரகுமானின் முதல் படமான ரோஜா திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் பாடல்களை கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார் ஏ.ஆர் ரகுமான். இப்போது வரை அவரது பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை. சமீபத்தில் அவரது இசையில் ஆடுஜீவிதம் திரைப்படம் கூட வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அந்த காலக்கட்டத்திலேயே இளையராஜாவிற்கும் ஏ.ஆர் ரகுமானுக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக பேச்சுக்கள் இருந்தன. அது உண்மை என நிரூபிக்கும் விதமாக பாடகி மின்மினி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

ilayaraja-1
ilayaraja-1

மின்மினி நிறைய இளையராஜா பாடல்களை பாடியிருக்கிறார். ஏ.ஆர் ரகுமான் பாடல்களிலும் பாடி இருக்கிறார். சின்ன சின்ன ஆசை என்கிற பாடலை இவர்தான் பாடியிருந்தார். அதன் பிறகும் சில காலங்கள் இவர் சினிமாவில் இருந்தார். ஆனால் பிறகு அவர் பாடுவதை நிறுத்திவிட்டார்.

இதுக்குறித்து அவர் பேட்டியில் கூறும்போது தனக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்ப்பட்டதாகவும் அதனால்தான் சினிமாவை விட்டு விலகியதாகவும் அவர் கூறியிருந்தார். இதோடு இன்னொரு தகவலையும் அவர் கூறியுள்ளார்.

அவர் ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல் பாடியப்பிறகு அவரை தொடர்பு கொண்ட இளையராஜா நீ இனி ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல் பாடக்கூடாது என கூறினார். மேலும் அதற்கு பிறகு அவர் மின்மினிக்கு அவரது இசையில் பாடுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படவில்லையாம்.

To Top