Connect with us

எவ்வளவோ படங்களில் எங்களை ஏமாத்தியிருக்காங்க!.. எம்.ஜி.ஆர் படம் குறித்து பேசிய இளையராஜா!..

ilayaraja1

Cinema History

எவ்வளவோ படங்களில் எங்களை ஏமாத்தியிருக்காங்க!.. எம்.ஜி.ஆர் படம் குறித்து பேசிய இளையராஜா!..

Social Media Bar

Ilayaraja: தமிழில் சினிமா என்ற ஒன்று துவங்குவதற்கு முன்னால் அது நாடகமாக இருந்த காலக்கட்டத்திலேயே ஏமாற்று வேலைகள் என்பது நடந்துக்கொண்டுதான் இருந்தன. பண விஷயத்தை பொறுத்தவரை சினிமாவில் இப்போதுவரை ஏமாற்று வேலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியான சம்பவங்கள் இளையராஜாவிற்கும் நடந்துள்ளது பண்ணைப்புரம் என்கிற சிறிய கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர் இளையராஜா. எடுத்த உடனேயே அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த இளையராஜா அப்போது காசுக்காக பல இடங்களில் இசையமைத்து வந்தார்.

இந்த நிலையில்தான் அன்னக்கிளி திரைப்படம் வழியாக தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தாலும் சம்பளம் மட்டும் அவ்வளவாக கிடைக்கவில்லை.

ilayaraja-1
ilayaraja-1

நிறைய படங்களில் 5 முதல் 6 பாடல்களுக்கு இசையமைப்பார் இளையராஜா. ஆனால் அவருக்கு ஒரு பாட்டுக்கான காசைதான் சம்பளமாக கொடுப்பார்கள். இளையராஜா பாட்டுக்கான மரியாதை அதிகரித்தப்போதுதான் இளையராஜாவுக்கான சம்பளமும் அதிகரித்தது.

இதனை ஒரு பேட்டியில் கூறும் இளையராஜா கூறும்போது எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில் நடித்தப்போது அவருக்கு சம்பளமாக 30 ரூபாய் தரப்பட்டது. ஆனால் அதே படத்தில் இசையமைத்த இசையமைப்பாளருக்கு 100 ரூபாய் தரப்பட்டது.

ஏனெனில் அவர் பிரபலமான ஒரு இசையமைப்பாளர் ஆவார். எனவே சினிமாவை பொறுத்தவரை பிரபலமாக இருப்பவர்களுக்குதான் சரியான சம்பளம் கிடைக்கிறது மற்றவர்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறுகிறார் இளையராஜா.

To Top