News
இந்தியன் 2 படத்தின் கதை இதுதான்.. 1க்கும் 2வுக்கும் இடையில் ஆறு வித்தியாசம் கூட கண்டுப்பிடிக்க முடியாது போல..
இந்தியன் திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த முக்கியமான திரைப்படம். பெரும்பாலும் இப்பொழுதும் மக்களிடம் ஷங்கரின் திரைப்படத்தில் பிடித்த படம் எதுவென்று கேட்டால் முதல்வன் அல்லது இந்தியன் திரைப்படத்தைதான் கூறுவார்கள்.
அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் ஷங்கர். நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று டிரைலரை வைத்து கணித்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் இதுதான் படத்தின் கதை என்று ஒரு கணிப்பு இருக்கிறது.
படத்தின் கதை:
கல்லூரி மாணவராக இருக்கும் சித்தார்த் தொடர்ந்து இந்தியாவில் அதிகமாகி வரும் லஞ்சத்தின் காரணமாக கடுப்பாகி வருகிறார். லஞ்சம் மட்டுமன்றி இன்னும் அதிக ஊழல்கள் இந்தியாவில் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இதற்காக தொடர்ந்து அகிம்சை வழியில் போராடுபவராக சித்தார்த் இருக்கிறார். அவருக்கு சண்டை எல்லாம் போடத் வராது என்று இருக்கிறது. இந்த நிலையில் இவர்களை அகிம்சை வழியில் போராடி வெல்ல முடியாது என்று சித்தார்த் நினைக்கும் போது தான் ஏற்கனவே சேனாபதி என்கிற ஒரு முதியவர் லஞ்சம் வாங்கியவர்களுக்கு பயம் காட்டி இருக்கிறார் என தெரிகிறது.
அதனை தொடர்ந்து சேனாபதியை திரும்பவும் வர வைப்பதற்காக சமூக வலைதளங்களில் இந்தியன் தாத்தா என்கிற ஹாஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து தமிழகம் முழுவதும் மக்கள் கம்பேக் இந்தியன் என்று அவரை அழைக்க துவங்குகின்றனர்.
இந்த நிலையில் இது எப்படியோ கமல் காதுக்கு செல்ல திரும்பவும் லஞ்சத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை துவங்குகிறார் சேனாபதி இந்தியன் திரைப்படத்தில் சேனாபதியின் வழக்கை ஆய்வு செய்து வந்த காவல் அதிகாரி இதனை அறிந்து திரும்பவும் வருகிறா.ர் அவர் இந்தியனை தேட துவங்குகிறார் ஆனால் இந்த முறை சேனாபதிக்கு இளைஞர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
கதைகளத்தில் உள்ள பிரச்சனை:
கிட்டத்தட்ட இந்த கதைகளம் அப்படியே இந்தியன் படத்தின் கதை போலத்தான் இருக்கிறது இதில் இப்போதைய தலைமுறைகளுக்கு ஏற்ற மாதிரி சில விஷயங்களை சேர்த்து இருக்கிறார்கள்.

ஆனால் படத்தில் எதிர்மறையாக நிறைய விஷயங்கள் இருக்கின்றன முக்கியமாக படத்தின் கதைப்படி கிட்டத்தட்ட 90 வயதை தொடும் இந்தியன் தாத்தா சட்டை எல்லாம் கழட்டி போட்டுவிட்டு சண்டையிடுவது என்பது பார்க்க நகைச்சுவையாக இருப்பதாக ட்ரைலரை பார்க்கும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்தியன் முதல் பாகத்தை பார்த்த பலரும் அந்த முதல் பாகத்திற்கு ஈடு செய்யும் வகையில் இரண்டாம் பாகம் இருக்குமா என்பதை கேள்வி குறிதான் என்கின்றனர்.
