அந்த மாதிரி பாவத்தை எல்லாம் சுந்தர் சிக்கு எப்போதும் பண்ண மாட்டேன்!.. திட்டவட்டமாக கூறிய விஷால்!.
செல்லமே திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால். திரைத்துறையில் பெரிய படங்கள் வருவதால் சின்ன படங்களை தேதி மாற்றி ரிலீஸ் செய்துக்கொள்ள சொல்லும் அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதனால் விடுமுறை அல்லது விழா நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்களே வெளியாகின்றன. இதே போல போன வருடம் தீபாவளிக்கு விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட இருந்தப்போது உதயநிதி அதை வேறு தேதியில் வெளியிட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் விஷாலுக்கும் ரெட் ஜெயண்டுக்கும் இடையே பிரச்சனையானது. பல பேட்டிகளில் விஷாலே இந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இதே தேதியில்தான் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படமும் வெளியாக இருந்தது. ஆனால் ஏனோ சுந்தர் சி அந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி அமைத்துள்ளார். இந்த நிலையில் இதற்கு விஷால்தான் காரணமா எனக் கேட்டுள்ளனர் பத்திரிக்கையாளர்கள்.
இதற்கு பதிலளித்த விஷால் கூறும்போது சுந்தர் சி எனக்கு அண்ணன் மாதிரி அவர் படத்தை தள்ளி வெளியிட சொல்ல நான் யாரு? அந்த மாதிரியான பாவத்தை நான் என்னைக்கும் சுந்தர் சி அண்ணனுக்கு பண்ண மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.