News
கேரளத்து குடி பொறுக்கிகளின் படம் !.. மஞ்சுமல் பாய்ஸை கழுவி ஊற்றிய ரஜினி பட வசனகர்த்தா!..
Manjummel Boys: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.
இந்த படமும் நல்ல வசூலை கொடுத்துள்ளது. 10 நண்பர்கள் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும்போது அங்கு குணா குகையில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கின்றனர். அதில் ஒரு குழியில் ஒருவர் தவறி விழுந்துவிட மற்றவர்கள் அவரை காப்பாற்றுவதே கதை.
இந்த நிலையில் ரஜினிகாந்த் திரைப்படமான 2.0 திரைப்படத்தில் வசனத்தில் பணிப்புரிந்தவரும், எழுத்தாளருமான ஜெயமோகன் இந்த படம் குறித்து சர்ச்சையை கிளப்பும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள குடிக்கார பொறுக்கிகளின் படம்தான் மஞ்சுமல் பாய்ஸ் என்கிறார் ஜெயமோகன்.

இயற்கை மீது ஆர்வம் கொண்டவர் ஜெயமோகன். இந்த கேரளத்தை சேர்ந்த குடிக்காரர்கள் சரக்கு பாட்டிலை வீசி எறிவதால் அதை மிதித்து கால் அழுகி யானைகள் இறக்கின்றன என்கிறார் ஜெயமோகன். மேலும் கேரளாவை சேர்ந்தவர்கள் எப்போதுமே குடித்துக்கொண்டே இருப்பார்கள்.
அவர்களுக்கு நாகரிகமே தெரியாது. வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது போன்றவற்றைதான் அவர்கள் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் செய்து வருகின்றனர். செங்கோட்டை – குற்றாலம் சாலைகள் மற்றும் கூடல்லூர்- ஊட்டி சாலைகளின் ஓரமாக கிடக்கும் புட்டிகள் எல்லாம் கேரளா மக்கள் போட்டதுதான் என்கிறார் ஜெயமோகன்.
ஏன் தமிழ்நாட்டு மக்கள் குடித்துவிட்டு பாட்டிலை போடுவது இல்லையா. கேரளா மக்கள் மட்டும்தான் போடுகிறார்களா என இதன் மூலம் கேள்வி எழுகிறது. “இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில்சொல்வார்கள்.” என்றெல்லாம் அந்த கட்டுரை முழுக்க தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன்.
பல வருடங்களாக இவர் எழுத்தாளராக இருப்பதாக கூறப்பட்டாலும் அதற்கான முதிர்ச்சி அவரது எழுத்துக்களில் தென்படவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்த கட்டுரை ட்ரெண்டிங் ஆகி வருகிறது
கட்டுரை லிங்க் – இங்கு க்ளிக் செய்யவும்.
