Connect with us

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. நான்ஸ்டாப் எண்டர்டெயின்மெண்ட் –  பட விமர்சனம்!..

jigarthanda 2

News

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. நான்ஸ்டாப் எண்டர்டெயின்மெண்ட் –  பட விமர்சனம்!..

Social Media Bar

ஒரு சினிமா என்பது பலருக்கு பொழுது போக்காக இருக்கும். சிலருக்கு அதுவே வாழ்க்கையாக இருக்கும். ஆனால் வரலாற்றில் பல நாட்டின் அரசியலையே புரட்டி போட்டிருக்கிறது சினிமா. தமிழகத்தில் துவங்கி அமெரிக்காவரை சினிமா அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் அதிகமானவை.

அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

படக்கதை:

படத்தின் கதைப்படி எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு கதாபாத்திரமாக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். படம் 1973 காலக்கட்டத்தில் நடக்கிறது. போலீஸாக வேண்டும் எனும் ஆசையில் இருக்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த பயம் ஒரு தடையாக இருக்கிறது.

இந்த நிலையில் எஸ்.ஐ ஆக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவின் மேல் ஒரு கொலை பழி விழுகிறது. 4 பேரை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் எஸ்.ஜே சூர்யா. இந்த நிலையில் பெரும் புகழ் கொண்ட நடிகர் ஒருவர் முதலைமைச்சர் ஆக திட்டமிடுகிறார்.

அதற்கு தடையாக ஆலிஸ் சீசர் (லாரன்ஸ்) என்னும் பழங்குடி இன ரவுடி ஒருவன் இருக்கிறான். அவனை தீர்த்து கட்டுவதற்காக ஆள் தேடும்போது அவருக்கு எஸ்.ஜே சூர்யா அறிமுகமாகிறார். ஏற்கனவே போலீஸ் வேலையை இழந்த எஸ்.ஜே சூர்யா இந்த விஷயத்தை செய்ய ஒப்பு கொள்கிறார்.

ஆலிஸ் சீசருக்கு சினிமாவின் மீது அதிக ஈடுபாடு உண்டு. எனவே தன்னை ஒரு இயக்குனராக அறிமுகம் செய்துக்கொண்டு அவரிடம் செல்லும் எஸ்.ஜே சூர்யா அவரை எப்படி தீர்த்துக்கட்ட போகிறார் என்பதே கதை.

விமர்சனம்:

விறுவிறுப்பான கதைக்களத்தில் சுறுசுறுப்பான கதை ஓட்டத்தை கொண்டு திரைப்படம் செல்கிறது. உலக சினிமா தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்களை கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தில் வைத்துள்ளார்.

உதாரணத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகரான க்ளின்ட் ஈஸ்ட்வுட் தான் லாரன்ஸிற்கு ஆலீஸ் சீசர் என்னும் பெயரை வைக்கிறார். அதே போல எஸ்.ஜே சூர்யாவும் தன்னை சத்யஜித்ரேவின் உதவி இயக்குனர் என கூறியே அறிமுகமாகிறார்.

வெற்றிமாறன், பா.ரஞ்சித் போல படத்தில் அரசியலை அதிகமாக பேசியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இரண்டாம் பாதி முழுக்க அதை பார்க்க முடிகிறது.

முக்கியமாக 1970களில் சினிமாவின் தாக்கம் மக்கள் மத்தியில் எப்படி வேறூன்றி இருந்தது. அது அரசியலை எப்படி புரட்டி போட்டது. உண்மையில் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை கார்த்தி சுப்புராஜ் படத்தில் பேசியுள்ளார்.

To Top