தமிழ்ல பேசுனாதான் விடுவேன்!.. கமல்ஹாசனிடம் வசமாக சிக்கிய ஷாருக்கான்!.. இருந்தாலும் ஆண்டவரு ரொம்ப ஸ்ட்ரிக்டு!.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல திரைப்படங்களை நடித்து கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். வழக்கமான சண்டை காட்சிகளுடன் கூடிய படங்கள் என்று இல்லாமல் தொடர்ந்து புதுவகையான திரைப்படங்களை முயற்சி செய்து வந்தவர்.
அவர் நடித்த அவ்வை சண்முகி, குணா போன்ற திரைப்படங்களை பொறுத்தவரை தமிழிலேயே சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படியான விஷயங்களை முயற்சி செய்தவர் கமல்ஹாசன் மட்டுமே. அதனால்தான் சிவாஜி கணேசணே தன்னுடைய சினிமா வாரிசாக கமல்ஹாசனை அறிவித்தார்.
கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஹே ராம். இந்த திரைப்படத்தை ரஜினிகாந்த் 40 தடவைக்கும் அதிகமாக பார்த்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் இரண்டாவது கதாநாயகனாக ஷாருக்கான் நடித்திருப்பார்.
இந்த திரைப்படம் இயக்கும்பொழுது ஹிந்தியிலும் தமிழிலும் எடுக்கப்பட்டது அப்பொழுது ஹிந்தியில் மட்டும் படத்தை எடுத்துவிட்டு தமிழில் டப்பிங் செய்து கொள்ளலாம் என்று ஷாருக்கான் கூறியுள்ளார். ஆனால் படத்தை இந்தி தமிழ் இரண்டு மொழிகளிலுமே படமாக்க வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன் ஒவ்வொரு காட்சியையுமே இரண்டு மொழிகளிலும் திரும்பத் திரும்ப எடுத்துள்ளார்.
இதில் சோதனையான விஷயம் என்னவென்றால் ஷாருக்கான் தமிழ் பேச வேண்டும் என்பதுதான். படத்தின் பல காட்சிகளில் ஷாருக்கானால் தமிழில் பேச முடியவில்லை இதற்காகவே அவர் தமிழ் கற்றுக் கொண்டார்.
அதில் அப்பா துப்பாக்கி என்கிற ஒரு வசனத்தை பேச மட்டும் அவருக்கு 42 டேக் போனதாக பேட்டியில் கூறினார் அந்தளவிற்கு படம் சரியாக வரவேண்டும் என நினைப்பவர் கமல்ஹாசன் என கமல்ஹாசன் குறித்து அவர் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்