என் வாழ்க்கையில் அதெல்லாம் கனவா போயிடும்னு நினைச்சேன்.. ரஜினியால் கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனைகள்.!

தமிழில் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஹாலிவுட் இயக்குனரான டெரண்டினோவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களில் டெரண்டினோவின் சாயலை பார்க்க முடியும்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. திரைத்துறைக்கு வரும்போதே நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராகதான் இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் பேசிய கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது என்னை ரஜினி சார் அவரது வீட்டிற்கு அழைத்து என்னிடம் பேட்ட படத்தின் கதையை கேட்டார். பிறகு சிரித்துவிட்டு இதை படமாக்கலாம் என கூறினார். ஆனால் அடுத்து காலா படத்தில் அவர் கமிட் ஆகிவிட்டார். எனவே என் படத்தில் நடிக்க மாட்டார் என நினைத்தேன்.

karthiksubbaraj
karthiksubbaraj
Social Media Bar

ஆனால் அவர் எனக்கு போன் செய்து கவலைப்பட வேண்டாம். அடுத்து சேர்ந்து படம் பண்ணலாம் என கூறினார். ஆனால் அதற்கு பிறகு அவர் அரசியலுக்கு செல்ல இருப்பதாக கூறினார். சரி நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான், இனிமேல் அவரை வைத்து படம் பண்ண முடியாது என நினைத்தேன்.

ஆனால் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் என்னை அழைத்தார். அதற்குள் நான் படத்தில் சில இடங்களில் கதைகளை மாற்றியிருந்தேன். ஆனாலும் அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. நான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசுகிறேன் என கூறினார். என்னால் அதை அப்போது நம்பவே முடியவில்லை என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்