Connect with us

மாணவர்கள் கெட்டு போவார்கள்.. கருப்பு பட போஸ்டருக்கு வந்த எதிர்ப்பு..!

Tamil Cinema News

மாணவர்கள் கெட்டு போவார்கள்.. கருப்பு பட போஸ்டருக்கு வந்த எதிர்ப்பு..!

Social Media Bar

நடிகர் சூர்யா சமீப காலங்களாகவே நல்ல நல்ல கதைகளங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் சில சமயங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்துவிடுகின்றன. சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்த திரைப்படம் கங்குவா.

இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படமாகும். ஆனால் வெளியான பிறகு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாத்திலுமே இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்தின் டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த டீசரை பார்க்கும்போது இந்த படம் ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்திலும் வக்கீல் கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார் சூர்யா.

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டர் இப்போது சர்ச்சையை ஏற்படுத்த துவங்கியுள்ளது. அதில் சூர்யா புகைப்பிடித்து கொண்டிருப்பது போல உள்ளது அந்த போஸ்டர். இந்த நிலையில் இது மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தி செல்லும் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சீக்கிரமே நடிகர் சூர்யா திரை உலகில் இருந்து விரட்டி அடிக்கப்படுவார் என கூறி வருகின்றனர். இது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

To Top