Tamil Cinema News
அந்த விஷயத்தில் பிரதீப் ரஜினி மாதிரி.. ஓப்பனாக கூறிய கே.எஸ் ரவிக்குமார்.!
தமிழ் சினிமா நடிகர்களில் பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சி என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் விதமாக இருக்கிறது. ஒரு நடிகர் 10 படத்திற்கு மேல் நடித்து அவருக்கு கிடைக்கும் வரவேற்பை ஒரே திரைப்படத்தில் பெற்றார் பிரதீப் ரங்கநாதன்.
அவரே இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரைவிட அதிகமாக படம் நடித்த கவின், மணிகண்டனை விடவும் பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் ஒரே ஒரு திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக எக்கச்சக்கமாக அதிகரித்து இருக்கிறது.
அடுத்து டிராகன் மற்றும் எல்.ஐ.கே ஆகிய திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களும் பெரிய வெற்றியை கொடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் அதிகரிக்கும்.
வெகு சீக்கிரத்திலேயே 5 வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் இருந்த இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்து விடுவார் என்று பேச்சுக்கள் இருக்கிறது இந்த நிலையில் ரஜினியுடன் பிரதீப் ரங்கநாதனை ஒப்பிட்டு சமீபத்தில் டிராகன் படத்தின் விழாவில் பேசியிருந்தார் கே.எஸ் ரவிக்குமார்.
அதில் கே எஸ் ரவிக்குமார் கூறும் பொழுது ரஜினிகாந்தை பொருத்தவரை எவ்வளவு பெரிய நடிகராக அவர் இருந்தாலும் இயக்குனர் என்ன சொல்கிறோமோ அதற்கு தகுந்த மாதிரி தான் நடிப்பார் தனக்கு தோன்றிய எதுவும் செய்ய மாட்டார்.
மிகவும் பணிவாக இருப்பார் அந்த விஷயத்தை அப்படியே நான் பிரதீப் ரங்கநாதனிடம் பார்க்கிறேன் என்னதான் முன்பு இயக்குனராக இருந்தவர் என்றாலும் கூட அதை கொஞ்சம் கூட வெளி காட்டிக் கொள்ளாமல் படத்தின் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டுக் கொண்டு அதன்படி நடிக்கிறார் இப்படி இருந்தால் பிரதீப் ரங்கநாதன் பெரிய இடத்தை பிடிப்பார் என்று கூறியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்
