Connect with us

மூன்று பேரை இயக்குனரா களம் இறக்குறேன்!.. உதவி இயக்குனர்களை வைத்து எல்.சி.யுவை கொண்டு போக ப்ளானா?

lokesh kanagaraj 2

News

மூன்று பேரை இயக்குனரா களம் இறக்குறேன்!.. உதவி இயக்குனர்களை வைத்து எல்.சி.யுவை கொண்டு போக ப்ளானா?

Social Media Bar

முன்பெல்லாம் இயக்குனர்கள் சினிமாவில் வாய்ப்பை பெறுவதே கடினமான விஷயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது இயக்குனர்கள் தொடர்ந்து இரண்டு மூன்று வெற்றி படங்கள் கொடுத்து விட்டால் அவர்களுக்கு வாய்ப்பு என்பது சரமாரியாக வந்துவிடுகிறது.

முக்கியமாக பெரும் நடிகர்களே இவர்களது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியாக வெறும் ஐந்து படங்களை இயக்கி இருந்தாலும் கூட லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழின் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்த நிலையில் எக்கச்சக்கமான படங்களில் கமிட்டாகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக லியோ படத்திற்கு பிறகு அவர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டி இருக்கிறது. அது இல்லாமல் சூர்யாவை வைத்து ரோலக்ஸ், கார்த்தியை வைத்து கைதி 2, இது இல்லாமல் விக்ரம் படத்தின் அடுத்த பாகம், இந்த கதை எல்லாம் தாண்டி இரும்பு கை மாயாவி என்னும் ஒரு கதையையும் வைத்துள்ளார். அதையும் சூர்யாவை வைத்து படமாக திட்டம் இருக்கிறது.

Celebrities at The ‘Zee Cine Awards’

இத்தனை படங்களை எப்படி வரிசையாக எடுக்கப் போகிறார் என்கிற கேள்வியும் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசும்பொழுது அவருடன் பணிபுரிந்து வரும் மூன்று உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து இயக்குனராகப் போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஏற்கனவே தன்னிடம் நிறைய கதைகள் இருப்பதாகவும் ஆனால் அதை படமாக எடுப்பதற்கு நேரம் மட்டும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் lcu படங்களை உதவி இயக்குனர்களை கொண்டு தொடர போகிறாரா லோகேஷ் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே எடுக்க வேண்டி இருக்கிற படங்களை பகிர்ந்து உதவி இயக்குனர்களிடம் கொடுத்து எடுத்துச் சொல்வாரா? அல்லது தான் வைத்திருக்கும் புது கதைகளை அவர்களிடம் கொடுத்து எடுக்கச் சொல்ல போகிறாரா என தெரியவில்லை. ஆனால் அப்படி இயக்கும் பட்சத்தில் சீக்கிரமே எல்.சி.யு திரைப்படங்களை திரையில் காண முடியும்.

To Top