Tamil Cinema News
அப்படி ஒரு சாதனை பண்ணியிருக்காரு.. வேற என்ன வேணும்.. அனிரூத் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்…
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார். தோல்வி முகம் காணாத இயக்குனர் என்று பெயர் வாங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் மிக குறுகிய காலகட்டத்திலேயே பெரும் இயக்குனர்கள் கூட தொட முடியாத ஒரு உயரத்தை தொட்டு இருக்கிறார் என்று கூறலாம்.
இயக்குனர் ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரியான உயரத்தை தொடுவதற்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது மிக முக்கியமான ஒரு இயக்குனராகிவிட்டார். அவர் சின்ன ஹீரோக்களை வைத்து படம் எடுத்தால் கூட அந்த திரைப்படங்கள் வெற்றியடையும் என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத் இசையில்தான் லோகேஷ் கனகராஜ் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் கூலி திரைப்படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிரூத்தையே இசையமைக்க வைப்பதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்திற்கு முன்பு கிட்டத்தட்ட அனிருத்தின் 31 பாடல்கள் வெற்றி கொடுத்திருக்கின்றன. அதற்கு மேல் அனிரூத்துக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு எதற்கு நான் யோசிக்க வேண்டும் விக்ரம் திரைப்படத்திலேயே எனக்கு பிடித்த மாதிரி இசையமைத்திருந்தார் அனிருத்.
அவரிடம் எனக்கு எப்படி இசை வேண்டும் என்று சிம்பிளாக கூறி விடுவேன் ஆனால் அவர் மிக சிறப்பான ஒரு இசையை அமைத்து கொடுத்து விடுவார் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
