Tamil Cinema News
தனுஷ்க்கு அந்த விஷயத்தில் பெரிசா விருப்பமே இல்ல.. உண்மையை கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி.!
ஒரு சில திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் சில இயக்குனர்கள் தங்களுக்கு இருக்கும் திறமையை காட்டிவிடுகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆக்ஷன் திரைப்படங்களை இயக்குவதில் மகிழ் திருமேனியின் இயக்கம் வித்தியாசமானதாக இருக்கிறது.
அவர் இயக்கிய மீகாமன், கலக தலைவன் மாதிரியான படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான படங்களாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து நடிகர் அஜித் இயக்கத்தில் இவர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆரம்பத்தில் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் மகிழ் திருமேனி. அப்போது அவருடன் தன்னுடைய அனுபவங்கள் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் கூறிய மகிழ் திருமேனி இயக்குனர் செல்வராகவன் அற்புதமான இயக்குனர். சினிமா மீது அதிக பிரியம் கொண்டவர் இயக்குனர் செல்வராகவன்.துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
அப்போது நான் பரிந்துரைத்த காட்சிகளை கூட அவர் தனது திரைப்படத்தில் வைத்தார். பொதுவாக இயக்குனர்கள் உதவி இயக்குனர் கூறும் காட்சிகளை வைக்க மாட்டார்கள். ஆனால் செல்வராகவன் அப்படி வைத்தார். அதே போல நடிகர் தனுஷும் முக்கியமான நடிகராவார்.
ஆரம்பத்தில் தனுஷிற்கு நடிக்க வருவதில் விருப்பமே இல்லை. அவருக்கு சமையலில்தான் விருப்பம். கேட்டரிங் படித்து வந்தார் தனுஷ். அவரது அண்ணன்தான் அவரை சினிமாவிற்குள் கொண்டு வந்தார். இப்போது தனுஷ் இவ்வளவு பெரிய இயக்குனராக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்புதான் காரணம்.
