நிஜமான பிகிலு இவர்தானாம்!.. மைதான் பட விமர்சனம்!.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் இன்ரு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் மைதான். இந்த திரைப்படம் கால் பந்து ஆட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் என கூறப்படுகிறது.
சையத் அப்துல் ரகிமன் என்கிற உண்மையான ஃபுட் பால் கோச்சின் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாக மைதான் இருக்கிறது. இந்த சையத் அப்துல் ரகிமன் இந்திய ஃபுட் பால் அணிக்கு கோச்சாக இருந்துள்ளார்.
இந்த திரைப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் அமித் ஷர்மா இயக்கியுள்ளார். 1950 காலக்கட்டங்களில் ஃபுட் பால் அணியின் கோச்சாக இருந்தார். இவர் இருந்த காலம் இந்திய கால்பந்து விளையாட்டின் பொற்காலம் என கூறப்படுகிறது.

உலக அளவில் இந்திய கால்பந்து ஆட்ட குழுவை இவர் நிலை நிறுத்தியிருக்கிறார். அந்த சமயங்களில் இவர் பட்ட கஷ்டங்களை கூறும் வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது. பிகில் திரைப்படத்தை விடவும் ஃபுட் பால் குறித்து அதிக தகவல்களை இந்த படம் பேசுவதாக கூறுகின்றனர் நெட்டிசன்கள்.
தயாரிப்பு ரீதியாகவும் இந்த படம் சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது. நாமே ஏதோ கால் பந்து மைதானத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. எப்படி பார்த்தாலும் நடிகர் அஜய் தேவ்கன் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும்.