News
மனசிலாயோ சாரே!.. போலீசிடம் பிரச்சனை செய்து கைதான ஜெயிலர் விநாயகன்!.
Jailer actor vinayakan: மலையாள சினிமாவில் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விநாயகன். முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவரது தனித்துவமான நடிப்பின் காரணமாக தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் விநாயகன்.
தமிழில் திமிரு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அப்போதைய காலகட்டங்களில் மலையாளத்தில் படங்களில் துணை கதாபாத்திரத்தில்தான் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக கிடைக்கவே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
தற்போது வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் விநாயகன் வில்லனாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து இனி இவருக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை உருவாக்கும் விதமாக ஒரு சம்பவம் தற்சமயம் நடந்துள்ளது. நடிகர் விநாயகன் மது அருந்திவிட்டு அவரது பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த விஷயத்தை அறிந்த போலீசார் நேரில் சென்ற பொழுது போலீசாரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் போலீசார்.
