Manjummel Boys Collection: ஓவர் ட்ரெண்டிங்கில் வசூல் சாதனை படைக்கும் மஞ்சுமல் பாய்ஸ்!.. இவ்வளவு கோடி லாபமா?

Manjummel Boys Collection: தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் தற்சமயம் இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மொழி திரைப்படங்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்க துவங்கியிருக்கின்றனர் என்று தெரிகிறது.

சில திரைப்படங்கள் வேற்றுமொழி படமாக இருந்தாலும் கூட அது சிறப்பான திரைப்படமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் மதிப்பு கொடுக்கின்றனர்.

மற்ற மொழி படங்களுக்கும் ஆதரவு:

இதற்கு முன்பு காந்தாரா என்கிற திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற பொழுது தமிழ்நாட்டிலும் மக்கள் அதை பார்க்க துவங்கினர். அதை பார்த்துவிட்டு தயாரிப்பு நிறுவனமே அந்த திரைப்படத்தை திரும்ப தமிழ் டப்பிங் செய்து தமிழகத்தில் வெளியிட்டது.

kanthara1
kanthara1
Social Media Bar

அதேபோல தற்சமயம் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிக வசூலை படைக்க துவங்கியிருக்கிறது. பொதுவாகவே மலையாள திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களாக இருக்கும்.

மஞ்சுமல் பாய்ஸ் வசூல்:

எனவே அவை சில கோடிகள் வசூலித்தாலே அது பெரிய வசூலாக பார்க்கப்படும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவிற்கு இணையான ஒரு வசூலை மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கொடுத்துள்ளது. தமிழகத்தில் வெளியாகி இரண்டு நாட்களில் 90 லட்சம் வசூல் செய்த மஞ்சுவலி பாய்ஸ் அடுத்த ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்தது.

Manjummel Boys Tamil reiview
Manjummel Boys Tamil reiview

இந்த நிலையில் கடந்த வார இறுதியில் எட்டு கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் வசூல் சாதனை கொடுத்திருந்தது மஞ்சுமல் பாய்ஸ். நேற்றைய நிலவரப்படி இந்த திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது மலையாள சினிமாவே எதிர்பார்க்காத ஒரு வரவேற்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது நிறைய திரையரங்குகள் தற்சமயம் வந்த படத்தை திரையிட துவங்கியிருக்கின்றன. எனவே இந்த வசூல் நிலவரம் இன்னமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.