Connect with us

55 வருஷ வாழ்க்கைல நான் பார்க்காத அதிசயம் இது!.. மஞ்சுமல் பாய்ஸ் சாதனையால் அதிர்ந்து போன திரையரங்க உரிமையாளர்!..

manjummel boys

News

55 வருஷ வாழ்க்கைல நான் பார்க்காத அதிசயம் இது!.. மஞ்சுமல் பாய்ஸ் சாதனையால் அதிர்ந்து போன திரையரங்க உரிமையாளர்!..

Social Media Bar

Manjummel Boys : தற்சமயம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்று வரும் திரைப்படமாக மஞ்சள் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. ஒரு மலையாள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு இதற்கு முன்பு இருந்ததே இல்லை என கூறலாம்.

நண்பர்கள் 10 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பொழுது அதில் ஒருவர் மட்டும் 900 அடியை ஆழமுள்ள ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொள்ள அவரை காப்பாற்ற மற்ற நபர்கள் சேர்ந்து செய்யும் நடவடிக்கைகளே இந்த படத்தின் கதையாக உள்ளது.

manjummel boys
manjummel boys

த்ரில்லர் திரைப்படங்கள் நிறைய இதுவரை சினிமாவில் வந்திருந்தாலும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு வருவதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் காட்சி அமைப்புகள்தான். படம் துவங்கியது முதல் இறுதி வரை அலுப்பு தட்டாமல் சுவாரசியமாக கதையை கொண்டு சென்று இருக்கின்றனர்.

திரையரங்கில் கிடைத்த வெற்றி:

இது குறித்து திருச்சி திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களான ஜிகர்தண்டா 2 மற்றும் ஜப்பான் திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

அதேபோல பொங்கலுக்கு வந்த அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களும் திரையரங்கில் பெரிதாக வசூலை பெற்று தரவில்லை ஆனால் ஒரு மலையாள திரைப்படமாக வெளிவந்தாலும் கூட தற்சமயம் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று கொடுத்திருக்கிறது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்.

Manjummel Boys Tamil reiview
Manjummel Boys Tamil reiview

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் திருவாரூர் அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இதுவரை மலையாள திரைப்படங்கள் வெளியானதே இல்லை. மலையாள திரைப்படமாகவே இருந்தாலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு உண்டே தவிர நேரடி மலையாள படங்கள் எல்லாம் அந்த மக்கள் மத்தியில் பிரபலம் கிடையாது.

அப்படிப்பட்ட பகுதிகளில் கூட முதல் முறையாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வெற்றியை வெற்றி இருப்பது எங்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்திருக்கின்றன. என்னுடைய 55 வருட திரையரங்க வாழ்க்கையில் இப்படி ஒரு சாதனையை நான் பார்த்தது கிடையாது என்று கூறுகிறார் ஸ்ரீதர்.

To Top