அந்த விபத்துல தப்பிச்சது மாரி செல்வராஜ் மட்டும்தான்!.. இறந்த குழந்தைகளின் கதை!.. அடுத்த பட அப்டேட்!.

Director Mari selvaraj : தமிழகத்தில் அரசியலாலும் பெரும் பணக்காரர்களாலும் நடந்த வன்முறைகளையும் கொடுமைகளையும் வெளிக்கொண்டு வருவதை ஒரு வேலையாக சில இயக்குனர்கள் செய்து வருகின்றனர். விடுதலை திரைப்படத்தில் கூட வெற்றிமாறன் வீரப்பனை பிடிப்பதற்காக வதை முகாமில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் வெளிப்படுத்தி இருப்பார்.

ஆனால் அது தொடர்பாக பிரச்சனைகள் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக படம் துவங்கும்போது அவை அனைத்தும் கற்பனை என்று போட்டிருப்பார். முனுசாமி வீரப்பன் தொடர் வெளியான போது பலருக்கும் விடுதலை படத்தில் காட்டி இருப்பது வீரப்பனை பிடிக்க சென்ற போலீசார் செய்ததைதான் காட்டப்பட்டுள்ளது என்று அறிந்து கொண்டனர்.

அந்த வகையில் மாரி செல்வராஜூம் தற்சமயம் உண்மையிலேயே நடந்த ஒரு விபத்தை அடிப்படையாகக் கொண்டு வாழை என்கிற திரைப்படத்தை இயக்கிய வருகிறார்.

Social Media Bar

வாழை மரங்களை ஏற்றச் சென்ற சிறுவர்களின் கூட்டம் ஒன்று விபத்துக்குள்ளாகி இறந்து போன கதைதான் அது. இதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த வாழைமரம் வெட்ட சென்ற சிறுவர்கள் கூட்டத்தில் சிறுவயதாக இருந்த பொழுது மாரி செல்வராஜூம் சென்றிருந்தாராம்.

அப்பொழுது அந்த விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒரு சிறுவன் மாரி செல்வராஜ் மட்டுமே எனவே கிட்டத்தட்ட தன் வாழ்வில் நடந்த கதையைதான் திரைப்படமாக்குகிறார் மாரி செல்வராஜ் என கூறப்படுகிறது இந்த திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இந்த செய்தி பரபரப்பாகி உள்ளது.