Connect with us

ஹிட் கொடுக்குமா.. கொடுக்காதா!. மழை பிடிக்காத மனிதன் – திரைப்பட விமர்சனம்!.

vijay antony

News

ஹிட் கொடுக்குமா.. கொடுக்காதா!. மழை பிடிக்காத மனிதன் – திரைப்பட விமர்சனம்!.

Social Media Bar

Mazhai Pidikatha Manithan: தற்பொழுது தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் நடிகராக களம் இறங்குகிறார்கள். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிகராக படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்.

இந்நிலையில் அவர் பல சுவாரசியமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகரின் மத்தியில் இடம்பெற்று வந்த நிலையில், அவரின் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இந்த மழை பிடிக்காத மனிதன் பற்றிய திரை விமர்சனத்தை தற்பொழுது காண்போம்.

மழை பிடிக்காத மனிதன்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள போன்ற வெற்றி படங்களை கொடுத்த விஜய் மில்டனின் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளிவந்துள்ளதால் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் போன்ற நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் கதை

இந்த படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் சீக்ரெட் ஏஜெண்டாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் கதாநாயகன், மினிஸ்டர் ஒருவரின் பையன் செய்த குற்றத்திற்காக தண்டிக்கிறான். அந்த காரணத்தால் கதாநாயகனின் காதல் மனைவி கொல்லப்படுகிறாள். மேலும் அந்த சம்பவத்தில் கதாநாயகனும் இறந்து விடுகிறான் என சரத்குமார் அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார். இந்நிலையில் தனது காதல் மனைவி இறந்த நேரத்தில் மழை பெய்ததால் மழையை வெறுக்கும் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

mazhai pidikatha manithan

மேலும் கதாநாயகன் உயிருக்கு ஆபத்து உள்ளது என அவரை அந்தமானுக்கு சரத்குமார் அனுப்பி வைக்கிறார். இதன் பிறகு அந்தமானில் வாழும் விஜய் ஆண்டனிக்கு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாக அமைகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஏற்றது போலவே கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் படம் ஆரம்பித்து 30, 40 நிமிடங்கள் வரைக்கும் கதை எதை நோக்கி பயணிக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. அதன் பிறகு விஜய் ஆண்டனி வைத்துள்ள நாய்க்குட்டிக்காக ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள் தான் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் நடித்த சரத்குமார் மற்றும் சத்யராஜுக்கு பெரிதாக ஸ்கோப் ஒன்றும் இல்லை. அதே சமயம் வில்லனாக வரும் தனஞ்சய் கதாபாத்திரமும் அவ்வளவாக இந்த படத்தில் செட் ஆகவில்லை. படத்தின் பாடல்களும் பெரிதாக ரசிக்கப்பட கூடிய அளவிற்கு இல்லை.

இறுதியாக கூறவேண்டுமென்றால் மேலோட்டமான ஒரு திரைக்கதை கொண்டதாக மழை பிடிக்காத மனிதன் படம் அமைந்திருக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனியின் நடிப்பு நன்றாக இருப்பதால் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

To Top