Connect with us

லியோ ஜெயிலரை க்ராஸ் பண்ணும்னு சொன்னீங்க!.. இப்ப என்ன சொல்றீங்க!.. ரசிகர்களை கேள்வி கேட்கும் மீசை ராஜேந்திரன்!.

jailer leo

News

லியோ ஜெயிலரை க்ராஸ் பண்ணும்னு சொன்னீங்க!.. இப்ப என்ன சொல்றீங்க!.. ரசிகர்களை கேள்வி கேட்கும் மீசை ராஜேந்திரன்!.

Social Media Bar

லியோ திரைப்படம் பெரும் வெற்றியை அடையும் என்று பலரும் கூறிவந்த காலகட்டத்திலேயே அந்த படத்தை குறித்து சர்ச்சையான ஒரு விவாதத்தை உருவாக்கி இருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது என்ன இருந்தாலும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ திரைப்படத்தால் தாண்டவே முடியாது.

அப்படி ஒருவேளை தாண்டி விட்டால் நான் எனது மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஏனெனில் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. லியோ திரைப்படம் அப்படியான ஒரு அலையை ஏற்படுத்தாது என்பது அவரது கருத்தாக இருந்தது.

ஆனால் லியோ திரைப்படம் வெளியான பொழுது பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரங்களாக திரைப்படம் நல்ல வசூலையும் கொடுத்தது. ஆனால் இப்போது அந்த திரைப்படம் நன்றாக ஓடவில்லை என்று கூறுகிறார் மீசை ராஜேந்திரன்.

இன்னும் சில திரையரங்குகளில் கூட்டமே சுத்தமாக இல்லை. போன ஒரு வாரம் மட்டுமே அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு இருந்தது இந்த வாரம் மக்கள் கூட்டம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் ஜெயிலர் திரைப்படத்திற்கு அப்படி இல்லாமல் ஐந்து வாரம் வரையில் குடும்பங்களாக சென்று மக்கள் படத்தை பார்த்து வந்தனர் என்று கூறிய மீசை ராஜேந்திரன் லியோ எப்படியும் ஜெயிலர் வசூலை தாண்டாது என்று நான் கூறியது போலவே லியோ திரைப்படம் தற்சமயம் ஜெயிலர் வசூலை தாண்டவில்லை இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

To Top