Connect with us

சிவாஜியை ஏன் தாக்கி பேசுனீங்க.. நிரூபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதில்…

sivaji mgr

Cinema History

சிவாஜியை ஏன் தாக்கி பேசுனீங்க.. நிரூபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதில்…

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில்தான் ரசிகர்கள் தனியாக பிரிந்து அவர்களுடைய நடிகர்களுக்காக சண்டையை போட துவங்கியிருந்தனர்.

அப்பொழுது எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வந்தது. இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் பழக்கம் அப்போதைய சமயத்தில் தான் உண்டானது.

இதனால் எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்களுக்கு இடையே எப்போதும் தள்ளுமுள்ளு இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் எம்ஜிஆரிடம் நேர்காணலில் பேசிய ஒரு பத்திரிகையாளர் அப்போது கேட்ட கேள்விகளும் அதற்கு எம்ஜிஆர் பதில்களும் கொஞ்சம் பிரபலமானவையாக இருக்கின்றது.

நிரூபர் கேட்ட கேள்வி:

sivaji-ganesan
sivaji-ganesan

அப்படியாக ஒரு கேள்வி கேட்கும் பொழுது  சிவாஜி குறித்து எம்ஜிஆர் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் குறித்து தான் எம்ஜிஆரிடம் கேள்விகளை கேட்டார் அந்த நிருபர்.

ஏனெனில் எம்ஜிஆர் ஒரு மேடை பேச்சில் பேசும்பொழுது இனி மிகையான நடிப்புகளுக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இருக்காது இயற்கையான நடிப்புக்கு தான் வரவேற்பு இருக்கும் என்று கூறியிருந்தார்.

அது சிவாஜியை வைத்துதான் அவர் கூறுகிறார் என்று அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தது  இது குறித்து எம்ஜிஆரிடம் கேட்ட பத்திரிகையாளர்கள் இயற்கையான நடிப்புக்கு தான் எதிர்காலத்தில் வாழவேற்பு இருக்கும் என்று கூறினீர்களே அது சிவாஜியை குறிப்பிட்டா என்று கேட்டனர்.

எம்.ஜி.ஆர் பதில்:

அதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர் நான் அப்படிச் சொன்னால் அது சிவாஜியைதான் தாக்கி பேசியதாக அர்த்தமா என்று கேட்டிருந்தார் எம்ஜிஆர்.

mgr
mgr

பிறகு நிரூபரிடம் சிவாஜி மிகையாக நடிக்கிறதா நீங்க நினைக்கிறீர்களா இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டு சிவாஜியின் நடிப்புக்கு கலங்கம் விளைவிக்காதீர்கள் என்று பதில் அளித்து இருந்தார்.

பிறகு இன்னொரு நிருபர் எம்ஜிஆரிடம் கேட்கும் பொழுது ஒரு நடிகையை நீங்கள் ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவரை எந்த கதாநாயகனுடனும் சேர்ந்து நடிக்க கூடாது என்று நிபந்தனை விதித்ததாக கூறுகிறார்கள் என்று கேட்டார.

அதற்கு பதில் அளித்த எம்ஜிஆர் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள் மஞ்சுளா என்று நேரடியாக கேளுங்கள். அவர் மற்ற நடிகரோடு நடிக்கலாம் என்றுதான் நான் அவரை ஊக்குவித்து இருக்கிறேன். என்னிடத்தில் பயிற்சி பெற்ற நடிகை வேறு நடிகர்களுடன் நடித்தால் அது எனக்கு பெருமை தான் என்று கூறி இருந்தார் எம்ஜிஆர். இந்த பேட்டி குறித்த தகவலை பிரபல சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top