Connect with us

சார் எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார்..! என்னை வீழ்த்த நினைச்சாங்க.. வெளிபடையாக கூறிய மைக் மோகன்..!

mic-mohan

News

சார் எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார்..! என்னை வீழ்த்த நினைச்சாங்க.. வெளிபடையாக கூறிய மைக் மோகன்..!

Social Media Bar

1980களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் மைக் மோகன். மூடுபனி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மைக் மோகன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதில் அவருக்கு 1981 இல் வந்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

அதே சமயம் அப்போதைய காலகட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் மைக் மோகன் இருந்து வந்தார். அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்கும் கதாநாயகிகளுடன் நெருக்கமாக இருப்பார் என்று அவரை குறித்து சர்ச்சைகள் வந்து கொண்டே இருந்தன.

சர்ச்சைக்கு உள்ளான நடிகர்:

மேலும் நிறைய நடிகைகளை இவர் காதலிப்பதாகவும் அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தன. சொல்லப்போனால் ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னன் என்று பார்க்கப்பட்டவர் மைக் மோகன். இதனால் அவரை குறித்து தொடர்ந்து பத்திரிகைகள் பேசி வந்தன.

இந்த நிலையில் அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்றை ஒரு பேட்டியில் கூறுகிறார் அதில் கூறும் பொழுது ”என்னை பற்றி நிறைய எழுதிய பத்திரிகைகள் ஒரு கட்டத்தில் எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக பத்திரிகைகளில் எழுத துவங்கினர்.

மன உளைச்சலுக்கு உள்ளான மைக் மோகன்:

இதனை தொடர்ந்து என்னை நெருங்கிய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூட இது குறித்து என்னிடம் கேட்க தொடங்கினார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். பிறகு பத்திரிகையாளர்களே என்னிடம் வந்து உங்களுக்கு எய்ட்ஸ் இல்லை என்று கூறுங்கள் சார் என்று கேட்டார்கள்.

அவர்களே எனக்கு ஒரு நோய் இருப்பதாக பரப்பி விட்டு பிறகு இல்லை என்று நானே கூற வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். நான் அப்படியெல்லாம் ஏதும் கூற மாட்டேன் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமோ எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் மைக் மோகன்.

To Top