Connect with us

இந்துக்கள் மனது புண்பட்டால் நான் பொறுப்பல்ல – நாடக காலத்துலயே அட்ராசிட்டி செய்த எம்.ஆர்.ராதா

Cinema History

இந்துக்கள் மனது புண்பட்டால் நான் பொறுப்பல்ல – நாடக காலத்துலயே அட்ராசிட்டி செய்த எம்.ஆர்.ராதா

Social Media Bar

தமிழ் திரையுலகில் ஒரு புரட்சிகரமான நட்சத்திரமாக இருந்தவர் நடிகவேள் எம்.ஆர் ராதா. அவர் தனது திரைப்படங்கள் நாடகங்கள் வாரியாக பல முக்கிய கருத்துக்களை மக்களிடையே பேசியுள்ளார்.

இப்போது திரையில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் பேசுவதற்கு ஐயப்படும் பல விஷயங்களை தனது திரைப்படங்களில் சர்வ சாதரணமாக பேசுபவர் எம்.ஆர் ராதா.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் எம்.ஆர்.ராதா ஒரு நாடக கம்பெனியை நடத்தி வந்தார். அதில் பல்வேறு வகையான நாடகங்களை இயற்றியுள்ளார்.

அதில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு நாடகம் ராமாயணம். ராமாயணம் நாடகத்தை ராமனை கேலி செய்யும் விதமாக எடுத்திருந்தார் எம்.ஆர் ராதா. அந்த நாடகத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுவதை கண்ட எம்.ஆர் ராதா இவ்வாறு நாடக நோட்டீஸ்களில் எழுதினார்.

“என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள், கண்டிப்பாய் என் நாடகத்திற்கு வர வேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல” என எழுதியிருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top