தமிழ், தெலுங்கு படமெல்லாம் பாக்க மாட்டேன்! – பேட்ட நடிகர் சர்ச்சை பேச்சு!

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் நவாசுதீன் சித்திக். இந்தியில் கேங்ஸ் ஆப் வசிப்பூர், சாக்ரெட் கேம்ஸ் உள்ளிட்ட படங்கள், வெப் சிரிஸில் நடித்துள்ளார்.

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” படத்தில் சிங்காரம் என்னும் வில்லன் கேரக்டரில் நவாசுதீன் சித்திக் நடித்திருந்தார்.

1000 கோடி அள்ளிய ராக்கி பாய்..! – மிரண்டும் போன இந்திய சினிமா!

சமீப காலமாக இந்தி நடிகர்கள் தென்னிந்திய சினிமா குறித்து சர்ச்சையாக பேசி வருவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் நவாசுதீன் சித்திக் பேட்டி ஒன்றில் “நான் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னியந்திய மொழிகளில் வரும் மசாலா படங்களை பார்ப்பதில்லை. நான் நடித்த படமாக இருந்தாலும் மசாலா படமாக இருந்தால் பார்ப்பதில்லை” என பேசியுள்ளார்.

தென்னிந்திய படங்கள் என்றாலே மசாலா படங்கள்தான் என்ற ரீதியில் நவாசுதீன் சித்திக் பேசியுள்ளது சோசியல் மீடியாவில் பலரிடம் எதிர்ப்பை பெற்றுள்ளது.

வயித்தெரிச்சலில் புரளும் இந்தி சினிமா.. வசூலை வாரிய தென்னிந்திய படங்கள்!

Refresh