Connect with us

13 வயசு குறைவான பையனுடன் ரொமான்ஸில் நயன்தாரா!.. நியாயமா இது.. ரசிகர்கள் ஆதங்கம்!.

Nayanthara

News

13 வயசு குறைவான பையனுடன் ரொமான்ஸில் நயன்தாரா!.. நியாயமா இது.. ரசிகர்கள் ஆதங்கம்!.

Social Media Bar

மலையாள சினிமாவில் இருந்து சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து பிரபலமானவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தில் அவர் நடித்தப்போது அவருக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது என கூறப்படுகிறது. ஐயா திரைப்படம் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் சந்திரமுகி. அப்போதைய காலக்கட்டத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகைகளுக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். ஆனால் அதில் மாற்றமாக நயன் தாராவிற்கு வாய்ப்புகள் அதிகமாக துவங்கியது.

லேடி சூப்பர் ஸ்டார்:

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட நயன் தாரா தற்சமயம் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த அன்னப்பூரணி திரைப்படம் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானது.

nayanthara
nayanthara

இந்த படத்தின் ஒ.டி.டி உரிமத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்ததே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இருந்தாலும் நயன்தாராவிற்கு வாய்ப்புகள் என்பது குறையவில்லை என்றே கூற வேண்டும்.

அடுத்த படம்:

இந்த நிலையில் அடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நயன்தாரா. துருவ் விக்ரமிற்கு தற்சமயம் 26 வயதுதான் ஆகிறது. ஆனால் நயன் தாராவிற்கோ 39 வயதாகிறது. இதற்கு முன்பு துருவ் விக்ரமின் தந்தையான விக்ரமோடு சேர்ந்து இருமுகன் படத்தில் நடித்தவர் தற்சமயம் மகனோடு சேர்ந்து நடிப்பது மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.

ரஜினி மீனாவோடு சேர்ந்து படம் நடிக்கவில்லையா.. ஏதோ சினிமாவில் இது புதிதாக நடப்பது போல பேசுகிறீர்களே என சிலர் கூறி வருகின்றனர்.

To Top