சும்மா சொல்லும் வார்த்தை கூட நிஜமாயிடம்!.. தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த மர்ம நிகழ்வு!..
கவிஞர்களுக்கு எப்போதுமே தங்கள் மொழியின் மீது ஒரு பெரிய ஆர்வம் உண்டு. சிலர் தங்கள் மொழியை கடவுளுக்கு நிகராக கருதுவார்கள் அப்படி கருதுபவர்களில் கவிஞர் வாலி முக்கியமானவர். தமிழ் திரையுலகில் பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியவர் வாலி.
கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரையிலும் பாடல்களுக்கு வரிகளை எழுதி வந்தவர், தமிழ்தான் தன்னை வாழ வைத்ததே என நம்புபவர், இவர் ஒரு வினோதமான நிகழ்ச்சி ஒன்றை ஒரு முறை பகிருந்தார் வாலிக்கு தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்கிற வாதத்தில் நம்பிக்கை உண்டு.
நாம் சொல்லும் வார்த்தைகள் நமது வாழ்க்கையை பெரிதாக பாதிக்கும் என்று நம்புபவர் அவர். தியாகராஜ பாகவதருக்கு நிகழ்ந்த மர்மமான நிகழ்வு ஒன்றை ஒரு பேட்டியில் கூறியிருந்தார் வாலி. தியாகராஜ பாகவதர் வால்மீகி என்னும் ஒரு படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி இருந்தார்.
அந்த திரைப்படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது திருடனாக இருக்கும் வால்மீகியாக தியாகராஜ பாகவதர் நடித்தார். அப்போது அரசன் நீ யார் என்று அவரிடம் கேட்கும்பொழுது நான் ஒரு கைதி என்பார் தியாகராஜ பாகவதர்.
அதோடு அந்த காட்சி முடிந்தது ஏனெனில் அப்போது பட பூஜைக்காக எடுக்கப்பட்ட காட்சி அது. அதன் பிறகு அன்று மாலையே அவர் மீது ஏதோ ஒரு குற்றம் காரணமாக அவரை கைது செய்தனர். உண்மையாகவே கைதியானார் தியாகராஜ பாகவதர். எனவே தமிழில் ஒரு வார்த்தை என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று வாலி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்