News
செ*** முடிச்சிட்டு கடைசியா அதையும் பண்ணுனாங்க… ஆண்களால் மனம் நொந்த ஓவியா!..
களவாணி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. ஓவியாவிற்கு தமிழே தெரியாது என்றாலும் கூட அவர் தேர்ந்தெடுத்த கதைக்களம் கிராமத்து கதைக்களமாக இருந்ததால் அவரை கிராமத்து பெண் போலவே அனைவரும் பார்த்து வந்தனர்.
ஆனால் அடுத்து வந்த படங்களில் எல்லாம் மிகவும் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார் ஓவியா. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரை அடுத்த படங்களிலும் கிராமத்து பெண்ணாக பார்க்க நினைத்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தது.
நடிகை ஓவியா:
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓவியாவின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. தொடர்ந்து மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார் ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டப்போது அதில் பங்கேற்ற ஆரவ் என்கிற நபரை காதலித்து வந்தார் ஓவியா. அதற்கு பிறகு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அந்த காதல் நிலைக்கவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு ஒரு வரவேற்பு கிடைத்தது.
திரையில் வரவேற்பு:
ஆனால் அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஃபீல்ட் அவுட் ஆன ஓவியா சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது நிறைய நபர்கள் என்னை காதலித்து ஏமாற்றியுள்ளனர். நிறைய பேர் என்னுடன் உடல் உறவு கொண்டு பிறகு ஏமாற்றினார்கள். ஆனால் இன்னும் மேலே போய் சிலர் என்னை பண விஷயத்திலும் கூட ஏமாற்றினார்கள் என்கிறார் ஓவியா.
இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் பலரும் பெண் கிடைக்காமல் இருக்கும்போது ஓவியாவை பணத்துக்காக ஏமாற்றி உள்ளனரே என இதுக்குறித்து பேசி வருகின்றனர் நெட்டிசன்கள்.
