Connect with us

மனதை திருடிவிட்டாய் பாகம் 2க்கு ப்ளானா!.. மீண்டும் இணையும் வடிவேலு பிரபுதேவா!..

vadivelu prabhu deva

News

மனதை திருடிவிட்டாய் பாகம் 2க்கு ப்ளானா!.. மீண்டும் இணையும் வடிவேலு பிரபுதேவா!..

Social Media Bar

Manathai thirudi vittai : ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பெயர் பெற்ற நடிகராக நடிகர் வடிவேலு இருந்து வந்தார். அவரது நகைச்சுவைகளுக்காகவே நிறைய திரைப்படங்கள் வரவேற்பு பெற்று இருக்கின்றன.

வின்னர், வசீகரா மாதிரியான திரைப்படங்களில் வடிவேலுவின் காமெடிக்கும் முக்கிய பங்கு இருப்பதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு பெரிய காமெடியனாக இருந்த வடிவேலு அதற்குப் பிறகு அரசியலுக்கு சென்று அதன் மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.

vadivelu-2
vadivelu-2

அதன் பிறகு திரும்ப சினிமாவிற்கு வந்த பிறகும் கூட வடிவேலு நடித்த எந்த ஒரு திரைப்படமும் பழைய திரைப்படங்கள் அளவிற்கு காமெடியாக இல்லை. நிறைய நடிகர்களுடன் காம்போவாக வடிவேலு நடித்திருக்கிறார். சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் இப்படி பல நடிகர்களுடன் காம்போ போட்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் வடிவேலு.

பிரபுதேவாவின் புது திட்டம்:

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்திலேயே அவர் காம்போவாக நடித்த முக்கியமான நடிகர் பிரபுதேவா அவர்கள்தான் காதலன், மனதை திருடிவிட்டாய் போன்ற திரைப்படங்களில் அவர் தொடர்ந்து பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

மனதை திருடிவிட்டாய் படத்தைப் பொறுத்தவரை அதில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் என்று மூன்று காமெடி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதனாலேயே அந்த திரைப்படம் பிரபலமான திரைப்படமாக இருந்து வருகிறது.

prabhu-deva
prabhu-deva

இந்த நிலையில் மீண்டும் அதே மாதிரியான ஒரு காமெடி திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் பிரபுதேவா. பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவருமே கதாநாயகனாக இருக்கக்கூடிய ஒரு காமெடி கதையை எழுதி அதில் இருவரும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தை வடிவேலுவிடவும் கூறி இருக்கிறார்.

வெகு நாட்களாக வடிவேலும் காமெடி திரைப்படங்களில் நடிக்காமல் இருப்பதால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவரும் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

To Top