Connect with us

15 வயசுலையே அந்த படத்துல கமலுக்கு டான்ஸ் கத்து கொடுத்தேன்!.. பிரபுதேவா அப்பவே மாஸ்!.

kamal prabhudeva

Cinema History

15 வயசுலையே அந்த படத்துல கமலுக்கு டான்ஸ் கத்து கொடுத்தேன்!.. பிரபுதேவா அப்பவே மாஸ்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன கலைஞர்களில் முக்கியமானவர் பிரபுதேவா. மிகவும் இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்த நடன கலைஞராக பிரபு தேவா அறியப்படுகிறார். பிரபு தேவா முதலில் கதாநாயகனாக நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். நடன கலைஞராக இருப்பதை விடவும் நாயகனாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து  அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.

ஹிந்தி சினிமாவில் இவர் இயக்கிய திரைப்படங்கள் பல கடும் தோல்வியை கண்டுள்ளன. தமிழில் வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். ஆனால் இயக்குனராக பிரபு தேவா அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும்.

இடையில் ஒரு பேட்டியில் கூறும்போது தமிழ் சினிமாவில் முதன் முதலில் வாய்ப்பை பெற்றது குறித்து தனது பேட்டியில் கூறியுள்ளார் பிரபு தேவா, ஆரம்பத்தில் தனது 13 ஆவது வயதிலேயே சினிமாவிற்கு வாய்ப்பு பெற வந்தார் பிரபு தேவா.

பள்ளி படிப்பை விட்டு விட்டு நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடன கலைஞராக சேர்ந்தார். அடுத்து தன்னுடைய 15 ஆவது வயதிலேயே பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக மாறினார்.

அப்போது அவருக்கு ஒரு பெரிய ப்ரோஜக்ட் வந்தது. அதாவது கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா படத்தில் முதன் முதலாக டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானார் பிரபுதேவா. அப்போது கமலுக்கு டான்ஸ் சொல்லி கொடுக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு பிரபு தேவாவிற்கு வந்தது.

நீரும் நெருப்பும் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு நடனம் சொல்லிக்கொடுத்த கமல்ஹாசனுக்கு இப்போது பிரபுதேவா நடனம் சொல்லி கொடுக்க வேண்டிய சூழ்நிலை. அப்படியும் சிறப்பாக நடனத்தை சொல்லி கொடுத்துள்ளார் பிரபு தேவா.

To Top