தளபதி 66ல் வந்த பிரச்சினை!? – பிரபுதேவாவை கூப்பிட்ட விஜய்!
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “தளபதி 66”.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரபு, சரத்குமார், ஷ்யாம், சங்கீதா என பலரும் இந்த படத்தின் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் விஜய்யை மாஸாக காட்ட இயக்குனர் வம்சி பல்வேறு காட்சிகளை அமைத்து வருகிறாராம். விஜய்க்கு நேரடி தெலுங்கு படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து விஜய் படத்தில் ஓப்பனிங் சாங் வைக்கப்பட்டுள்ளதாம். எப்போதுமே நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் இந்த படத்தில் தனது பழைய நண்பரான பிரபுதேவாவை டான்ஸ் கொரியொகிராப் பண்ண அழைத்துள்ளாராம்.
பிரபுதேவா இயக்கத்தில் போக்கிரி, வில்லு போன்ற படங்களை விஜய் நடித்திருக்கிறார். இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அதற்கு பின்னர் பிரபுதேவா விஜய்க்கு டான்ஸ் கொரியோகிராப் செய்யவில்லை. தற்போது மீண்டும் இந்த இருவர் கூட்டணி டான்ஸில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..